தமிழ்நாடு

tamil nadu

குளம் ஆக்கிரமிப்பு - மீட்க கோரிக்கை

By

Published : Jul 20, 2021, 7:59 AM IST

நன்னிலம் அருகே ஆக்கிரமிக்கப்பட்டுள்ள குளத்தை மீட்டு தரவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

kamugakudi-people-request-to-govt-to-rescue-pond
கமுகக்குடி ஆக்கிரமிப்பு குளத்தை மீட்க கிராம மக்கள் கோரிக்கை

திருவாரூர்:நன்னிலம் அருகே கமுகக்குடி கிராம பஞ்சாயத்திற்கு சொந்தமான 3 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஆக்கட்டான் குளம் உள்ளது. இக்குளத்தின் நீரை பல ஆண்டுகளாக விவசாய பாசனத்திற்காக அக்கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

சில தனிநபர்கள் குளத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டி குடியேறியதால், அதன் பரப்பளவு குறைந்து நீர் இருப்பும் குறையத்தொடங்கியது. இதுதொடர்பாக பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடமும், வட்டாட்சியர் அலுவலகத்திலும் புகார் அளித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி குளத்தை தூர்வார வேண்டும் என கமுகக்குடி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:காவிரி நதி நீர் விவகாரம் - போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கை

ABOUT THE AUTHOR

...view details