தமிழ்நாடு

tamil nadu

படிப்பிலும், விளையாட்டிலும் அசத்தும் அரசுப்பள்ளி மாணவிகள்

By

Published : Jan 30, 2020, 2:25 PM IST

திருவாரூர்: படிப்பிலும், விளையாட்டிலும் அதிகளவில் வெற்றிபெற்று அரசுப்பள்ளி மாணவிகள் அசத்திவருகின்றனர்.

படிப்பிலும், விளையாட்டிலும் அசத்தும் அரசு பள்ளி மாணவிகள்
படிப்பிலும், விளையாட்டிலும் அசத்தும் அரசு பள்ளி மாணவிகள்

திருவாரூரில் அரசுப் பள்ளிகளுக்கு இடையேயான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் 19 வயதிற்குள்பட்டோருக்கான கபடி போட்டியில் மன்னார்குடி அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவிகள் வெற்றிபெற்று முதலிடம் பிடித்தனர்.

இதேபோல் 19 வயதிற்குள்பட்டோருக்கான கைப்பந்து, இறகுப்பந்து போட்டியிலும் மாவட்ட அளவில் மன்னார்குடி அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவிகள் வெற்றிபெற்றனர். மேலும், 17 வயதிற்குள்பட்டோருக்கான இறகுப்பந்து போட்டியிலும் அதே பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்தனர்.

படிப்பிலும், விளையாட்டிலும் அசத்தும் அரசுப்பள்ளி மாணவிகள்

இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் புனிதா பேசுகையில், 'எங்கள் பள்ளி படிப்பிலும், விளையாட்டிலும் சிறந்து விளங்குகிறது. இதற்கு முக்கியக் காரணம் எங்கள் பள்ளி ஆசிரியர்கள்தான்' என்றார்.

இதையும் படிங்க: மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி

Intro:Body: படிப்பிலும் 100% தேர்ச்சி விளையாட்டு போட்டியிலும் 100%தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவிகள்.

மாவட்ட அளவிலான கபடி, கைப்பந்து, இறகுப்பந்து போட்டிகளில் மன்னார்குடி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளனர்.


அரசு பள்ளிகளுக்கு இடையேயான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் திருவாரூரில் நடைபெற்றது. இதில் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான கபடி போட்டியில் மன்னார்குடி அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவிகள் திருவாரூர் மாவட்ட அளவிலான கபடி போட்டியில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றனர்.

இதே போல் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான கைப்பந்து மற்றும் இறகுப்பந்து போட்டியிலும் மாவட்ட அளவில் மன்னார்குடி அரசு பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளனர்.

இதே போல் 17 வயதிற்கு உட்பட்டோருக்கான இறகுப்பந்து போட்டி என மாவட்ட அளவிலான மூன்று போட்டிகளில் அரசு பள்ளியை சேர்ந்த மாணவிகள் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

இவர்களை இப்பள்ளியின் தலைமை ஆசிரியை, ஆசிரியர்கள்,மாணவ மாணவிகள் பாராட்டினர்.

பேட்டி: புனிதா (தலமை ஆசிரியர்)Conclusion:

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details