தமிழ்நாடு

tamil nadu

புரெவி புயல், பருவ மழையால் பயிர்கள் சேதம் - நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை!

By

Published : Dec 23, 2020, 8:44 PM IST

புரெவி புயல் மற்றும் பருவ மழையால் சேதமடைந்துள்ள நெற்பயிர்களுக்கு போர்க்கால அடிப்படையில் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என, மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

Farmers demand relief for crop damage
Farmers demand relief for crop damage

திருவாரூர்: தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தினர், மாவட்ட ஆட்சியர் சாந்தாவிடம் கோரிக்கை மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் கூறிய தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் மாவட்ட தலைவர் அழகர்ராஜ், "புரெவி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, பயிர் காப்பீடு தொகையினை 60 தினங்களுக்குள் வழங்க வேண்டும் என பிரதம மந்திரி திட்டத்தின் விதிகளின்படி, உடனடியாக காப்பீட்டு தொகையை வழங்க ஆவண செய்ய வேண்டும்.

புரெவி புயல் மற்றும் மழை காரணமாக திருவாரூர் மாவட்ட ஆறுகளில் ஏற்பட்ட உடைப்பால், வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கி வீடுகளை இழந்தவர்களுக்கும் அரசு பசுமை வீடுகள் கட்டித்தர வேண்டும். ஆறுகளில் உடைப்பு ஏற்பட்டுள்ள இடங்களில் குடிமராமத்து பணிகள் மூலம் கரைகளை பலப்படுத்த வேண்டும்.

புரவி புயலால் பெரிதும் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களில், எம்எஸ் சுவாமிநாதன் குழு பரிந்துரையின் அடிப்படையில் நெல்லுக்கு உற்பத்தி செலவை போல் இரண்டு மடங்கு கூடுதலாக குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க மத்திய அரசுக்கு பரிந்துரைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

இதையும் படிங்க:பொங்கல் பரிசு பலருக்குத் தலைவலி - செங்கோட்டையன்

ABOUT THE AUTHOR

...view details