தமிழ்நாடு

tamil nadu

பாசன வாய்க்கால்களில் தண்ணீர் இல்லாததால் விவசாயிகள் வேதனை!

By

Published : Oct 25, 2020, 6:32 PM IST

திருவாரூர்: கூத்தாநல்லூரில் ஆறுகளில் தண்ணீர் ஓடினாலும் பாசன வாய்க்கால்களில் தண்ணீர் இல்லாததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Drains
Drains

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அதன் சுற்று வட்டாரத்தில் வெண்ணாறு, வெட்டாறு, பாண்டவ யாரு, கோரையாறு என நான்கு ஆறுகள் ஓடுகின்றன. தற்போது வெண்ணாறு மற்றும் பாண்டவையாற்றில் தண்ணீர் அதிகளவில் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்த ஆறுகள் அனைத்தையும் தூர்வாரிய போது வாய்க்கால்களும் முறையாக தூர்வாரி இருந்தால், ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். வாய்க்காலில் தண்ணீர் சென்றிருக்கும். ஆனால் வாய்க்கால்களை முறையாக தூர்வாராததால் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. இதனால் அந்த பகுதி பாசன வாய்க்கால் மூலம் பாசன வசதி பெற்று வந்த விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு விவசாய சங்க நிர்வாகி சுதர்சன் கூறுகையில், "டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த போதிலும், அதற்கான பணிகள் தற்போதுவரை தொடங்கவில்லை. கூத்தாநல்லூரை சுற்றியுள்ள மேல பனங்குடி, கீழே பணங்குடி, குன்னக்குடி, புளியங்குடி உள்ளிட்ட கிராமங்களில் பாசன வாய்க்கால்கள் முறையாக தூர்வாரப்படாததால் அந்த பகுதிகளுக்கு மேட்டூர் தண்ணீர் செல்ல முடியாமல் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கூத்தாநல்லூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 2000 ஏக்கர் விவசாய நிலங்கள் இருந்தாலும், ஆயிரம் ஏக்கர் நிலத்தில்தான் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். சிலர், 50 ஏக்கருக்கும் மேலாக பொது இடங்களை ஆக்கிரமித்துள்ளனர். குறிப்பாக, பாசன வாய்க்கால்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் தண்ணீர் உள்ளே வர முடியாத சூழல் உருவாகிறது.

எனவே, உடனடியாக இப்பகுதியில் உள்ள வாய்க்கால்களை தூர்வாரி பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்க வலியுறுத்தியும் பொது இடங்களை ஆக்கிரமித்துள்ளவர்கள் மீது நகராட்சி, வருவாய்துறை அலுவலர்களிடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதே நிலை தொடர்ந்தால் விவசாய மக்களை ஒன்று திரட்டி மாபெரும் போராட்டம் நடத்துவோம்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details