தமிழ்நாடு

tamil nadu

சம்பா பயிர் நோய் தாக்குதல் - ஆய்வு நடத்த பி.ஆர். பாண்டியன் கோரிக்கை!

By

Published : Dec 10, 2019, 1:23 PM IST

திருவாரூர்: ஆனை கொம்பன் நோய் தாக்குதலால் காவிரி டெல்டாவில் சம்பா பயிர் அழிந்துவருவதால், உடனடியாக இது குறித்து உயர்மட்டக்குழு மூலம் ஆய்வு நடத்துமாறு முதலமைச்சருக்கு பி.ஆர். பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பி.ஆர். பாண்டியன் பேட்டி
பி.ஆர். பாண்டியன் பேட்டி

திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை, பாளையக்கோட்டை பகுதிகளில் ஆனை கொம்பன் நோயால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களை நேரில் பார்வையிட்டு, பாதிப்பு குறித்து விவசாயகளிடம் கேட்டறிந்த பின் செய்தியாளர்களிடம் பி.ஆர். பாண்டியன் தெரிவித்தாவது, "காவிரி டெல்டாவில் கஜா புயல் தாக்குதலால் சென்ற ஆண்டு பாதிக்கபட்ட விவசாயிகள் இதுவரையில் நிவாராணம் பெற முடியாமல் போராடிவருகின்றனர். இதனிடையே, நடப்பாண்டில் பருவ மழை உரிய காலத்தில் பெய்ததால் சம்பா சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுவந்தனர்.

பயிர்கள் செழிப்பாக வளர்ந்து வருவதைப் பார்த்து நல்ல மகசூல் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த நிலையில், 'இடி விழுந்தார் போல்' ஆனை கொம்பன் என்ற ஈ தாக்குதலால் சம்பா பயிர்கள் அடியோடு அழிந்து வருவதை பார்த்து விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.

பி.ஆர். பாண்டியன் பேட்டி

அதனைத் தடுப்பதற்கு வழியின்றி பெரும் பேரழிவை எதிர்கொள்ள முடியாமல் பரிதவிக்கின்றனர். எனவே முதலமைச்சர் உடனடியாக உயர்மட்டக்குழு ஆய்வு நடத்த வேண்டும்" என அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இதையும் படிங்க: கனமழை தாக்கம்: நான்காயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சின்ன வெங்காயம் சேதம்

Intro:Body:ஆனை கொம்பன் நோய் தாக்குதலால் காவிரி டெல்டாவில் சம்பா பயிர் அழிந்து வருவதாகவும் உடனடியாக உயர்மட்டக்குழு ஆய்வு நடத்த முதல்வருக்கு பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள்.


திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை, பாளையக்கோட்டை பகுதிகளில் பாதிக்கப்பட்ட பயிர்களை நேரில் பார்வையிட்டு பாதிப்பு குறித்து விவசாயகளிடம் கேட்டறிந்த பின் செய்தியாளர்களிடம் பி.ஆர் பாண்டியன் தெரிவித்தாவது..

காவிரி டெல்டாவில் கஜாபுயல் தாக்குதலால் சென்ற ஆண்டு விவசாயம் பாதிக்கபட்ட விவசாயி இதுவரையில் நிவாராணம் பெற முடியாமல் போராடி வருகின்றனர். இந்நிலையில் நடப்பாண்டு பருவ மழை உரிய காலத்தில் பெய்ததால் சம்பா சாகுபடி பணிகளில் தீவிரமாக நம்பிக்கையுடன் ஈடுபட்டு வந்தனர். பயிர்கள் செழிப்பாக வளர்ந்து வருவதை பார்த்து நல்ல மகசூல் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த நிலையில் "இடி விழுந்தார் போல்" ஆணை கொம்பன் என்ற ஈ தாக்குதலால் சம்பா பயிர்கள் அடியோடு அழிந்து வருவதை பார்த்து கண்ணீர் வடிக்கின்றனர். தடுப்பதற்கு வழியின்றி பெரும் பேரழிவை எதிர்கொள்ள முடியாமல் பரிதவிக்கின்றனர். எனவே தமிழக முதலமைச்சர் விரைந்து நடவடிக்கை மேற்க்கொண்டு வேளாண் துறை, பேரிடர் மேலாண்மை மற்றும் காப்பீடு நிறுவன உயர் அலுவலர்கள் தலைமையில் உயர் மட்டக்குழுவை டெல்டா மாவட்டங்களுக்கு விரைந்து அனுப்பிவைத்து பாதிப்பிற்கேற்கேற்ப உாிய இழப்பீடு வழங்க அவசரக்கால நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டும் . அடுத்த ஆண்டில் ஆணைகொம்பன் நோய் இல்லை என்கிற நிலையை தமிழக அரசு உருவாக்கவேண்டும் என்றார். Conclusion:

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details