தமிழ்நாடு

tamil nadu

பருத்திச் செடியை அழிக்கும் மாவுப்பூச்சி - விவசாயிகள் வேதனை

By

Published : Jun 26, 2020, 8:33 PM IST

திருவாரூர்: பருத்திச் செடியில் சப்பாத்தி, மாவுப்பூச்சி தாக்குதல் அதிகரித்திருப்பதால் போட்ட முதலும் கிடைக்காமல் போய்விடுமோ என விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.

cotton
cotton

நாகப்பட்டினம், தஞ்சை திருவாரூர் ஆகிய டெல்டா பகுதிகளில் கோடை சாகுபடிகளான உளுந்து, பயறு, கடலை, பருத்தி உள்ளிட்டவற்றை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 20ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பருத்தி சாகுபடிக்கு தண்ணீர் அதிகளவில் தேவைப்படுவதில்லை. 15 நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது.

செடிகளை தாக்கும் மாவுப்பூச்சி

தற்போது, பருத்தி ஓரளவு நல்ல விளைச்சலை தந்தாலும், சப்பாத்தி, மாவுப்பூச்சிகளின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனால், பருத்திச் செடிகளில் உள்ள காய்களும், இலைகளும் சுருண்டு காய்ந்து போவதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். அரும்பாடு பட்டு பாதுகாத்த பருத்திச் செடியை மாவுப் பூச்சிக்கு பலியாவதை நினைத்து மரண வேதனையடைகின்றனர்.

காய்ந்து போகும் இலைகள்

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது, பொதுமுடக்கத்தால் வருமானமின்றி தவித்து வந்த நிலையில் வட்டிக்கு பணம் வாங்கி, பருத்தி சாகுபடி செய்த நிலையில், ஓரளவுக்கு லாபம் கிட்டும் என்ற நம்பிக்கையில் இருந்தோம். ஆனால் பருத்திகளில் தற்போது சப்பாத்தி, மாவு பூச்சிகளின் தாக்கம் அதிகமாக இருப்பதால் போட்ட லாபமே கிடைக்குமா என்ற அச்சம் எழுந்துள்ளது.

பருத்திச் செடி

ஏக்கருக்கு 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம். இந்த சுற்றுவட்டார பகுதிகளில் வேளாண்துறை அலுவலர்கள் யாரும் இதுவரை வந்து நோயின் காரணம் குறித்து தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து மருந்துகள் பரிந்துரைக்கப்படவில்லை என்று தெரிவித்தனர். எனவே, மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு பருத்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:ஹெச். ராஜா முன்னிலையில் பாஜகவில் ஐக்கியமான காங்கிரஸ் முக்கிய பிரமுகர்

ABOUT THE AUTHOR

...view details