தமிழ்நாடு

tamil nadu

திருவாரூர்: மாவட்டம் முழுவதும் 50ஆயிரம் நெல்மூட்டைகள் தேக்கம்!

By

Published : Feb 21, 2021, 10:07 PM IST

வியாபாரிகளின் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாததால் திருவாரூர் மாவட்டம் முழுவதும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன.

50,000 paddy bundles are stagnant in the Thiruvarur district
திருவாரூர்: மாவட்டம் முழுவதும் 50ஆயிரம் நெல்மூட்டைகள் தேக்கம்

திருவாரூர்:மாவட்டம் முழுவதும் 480 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டுவருகிறது.

குறிப்பாக, திருத்துறைப்பூண்டி மன்னார்குடி, நன்னிலம், ஆண்டிப்பந்தல் உள்ளிட்ட இடங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை ஏற்றிச்செல்வதற்காக லாரிகள் உரிய நேரத்திற்கு வராததால், விவசாயிகள் தாங்கள் கொண்டுவரும் மூட்டைகளை அடுக்கிவைக்க இடமில்லாமல், வயல், சாலையோரங்களில் அடுக்கிவைக்கின்றனர். இதனால், மாவட்டம் முழுவதும் சுமார் 50 ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன.

திருவாரூர்: மாவட்டம் முழுவதும் 50ஆயிரம் நெல்மூட்டைகள் தேக்கம்

நெல் கொள்முதல் நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பணத்தைப் பெற்றுக்கொண்டு வெளியூர் விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்துவிட்டு உள்ளூர் விவசாயிகளை அலைக்கழிப்பதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தேக்கமடைந்துள்ள நெல் மூட்டைகள்

மேலும், விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் நெல் மூட்டைகள் தேக்கமடையாமல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

இதையும் படிங்க:விவசாயிகளின் முதலமைச்சரா ஈபிஎஸ்?

ABOUT THE AUTHOR

...view details