தமிழ்நாடு

tamil nadu

பட்டப்பகலில் இளைஞர் வெட்டி கொலை

By

Published : May 1, 2021, 9:05 PM IST

திருவண்ணாமலை: பிரபல ரவுடி ஒருவரை ஆறு பேர் கொண்ட கும்பல் பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

ஆரணியில் பட்டப்பகலில் இளைஞர் வெட்டி கொலை
ஆரணியில் பட்டப்பகலில் இளைஞர் வெட்டி கொலை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் வி.ஏ.கே நகர் பகுதியைச் சேர்ந்தவர், யோகேஷ்(24). இவர் மீது கொலை, அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் இன்று(மே.1) வி.ஏ.கே நகர் மெயின் ரோடு பகுதியில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பலை யோகேஷை ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியது.

இதில் படுகாயமடைந்த யோகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை மீட்டு உடற்கூராய்விற்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பியோடிய கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல்கட்ட விசாரணையில், யோகேஷூக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஓர் கும்பலுக்கும் ஒரு வாரத்திற்கு முன்பு மோதல் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பிரசவத்தின்போது தாய், சேய் உயிரிழப்பு: மருத்துவர்கள் மீது உறவினர்கள் குற்றச்சாட்டு!

ABOUT THE AUTHOR

...view details