தமிழ்நாடு

tamil nadu

டாஸ்மாக் கடையை அகற்றக்கோரிக்கை - வார்டு உறுப்பினர்கள் பதவி ராஜினா

By

Published : Feb 1, 2023, 5:38 PM IST

Updated : Feb 2, 2023, 6:01 AM IST

அரசு பள்ளி அருகில் இயங்கி வரும் டாஸ்மாக் கடை அகற்றக்கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து கிராம சபை கூட்டத்தில் 5 வார்டு உறுப்பினர்கள் தங்களது பதிவை ராஜினாமா செய்துவிட்டு கூட்டத்தை புறக்கணித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டாஸ்மாக் கடையை அகற்றக்கோரிக்கை - வார்டு உறுப்பினர்கள் பதிவு ராஜினா
டாஸ்மாக் கடையை அகற்றக்கோரிக்கை - வார்டு உறுப்பினர்கள் பதிவு ராஜினா

திருவண்ணாமலை:ஆரணி அருகே நடுக்குப்பம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த அரசு பள்ளியில் நடுக்குப்பம் விநாயகபுரம் காமக்கூர் ஏரிகுப்பம் ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

மேலும், நடுக்குப்பம் கிராமத்திலுள்ள இந்த அரசு பள்ளியில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் ஆரணி படவேடு சாலையில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த டாஸ்மாக் கடையில் குடிமகன்கள் குடித்துவிட்டு தகராறில் ஈடுபடுவதால் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் கடுமையாக பாதிப்படைவதாக பல புகார்கள் வந்துள்ளன.

டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி வார்டு உறுப்பினர்கள் ஆர்பாட்டம்

இதனால் கிராம மக்கள் பலமுறை டாஸ்மாக் துறைக்கு மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளித்தும் எந்தவித ஒரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இதனையடுத்து கடந்த வருடம் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்திலும் டாஸ்மார்க் கடை அகற்றக்கோரி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுது.

இந்நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடுக்குப்பம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் வேளாண்மை துறை அலுவலர் தமிழ் தலைமையில் அன்று நடைபெற்ற சிறப்பு கிராம கூட்டத்தை சுகந்தி, ஏழுமலை, குணாநிதி, கீதா, பரிமளா,
உள்ளிட்ட 5 ஊராட்சி மன்ற 5 வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் சிறப்பு கிராம சப கூட்டத்தை புறக்கணித்துவிட்டு 5 வார்டு உறுப்பினர்கள் ராஜினாமா கடிதத்தை ஊராட்சி மன்ற தலைவர் பிரபாவதி துரையிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கினார்கள்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஆரணி தாசில்தார் ஜெகதீசன் மற்றும் மேற்கு ஆரணி வட்டார வளர்ச்சி திட்ட அலுவலர் சவிதா ஆகியோர் 5 வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களிடம் சமாதான பேச்சில் ஈடுபட்டனர். ஆனால், டாஸ்மாக் நிர்வாகம் கடையை அகற்றும் வரை எந்த சமரசமும் எங்களால் ஏற்க முடியாது என்று வார்டு உறுப்பினர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

இதையும் படிங்க:என்எல்சிக்கு ஒரு பிடி மண்ணைக்கூட கொடுக்க மாட்டோம்: அன்புமணி ராமதாஸ் ஆவேசம்

Last Updated : Feb 2, 2023, 6:01 AM IST

ABOUT THE AUTHOR

...view details