தமிழ்நாடு

tamil nadu

சாத்தனூர் அணைக்கு சுற்றுலா பயணிகள் செல்லத் தடை!

By

Published : Apr 23, 2021, 7:48 AM IST

கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, சாத்தனூர் அணைக்கு நேற்று முன்தினம் (ஏப்.21) முதல் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

சாத்தனூர் அணைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி ரத்து!
சாத்தனூர் அணைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி ரத்து!

திருவண்ணாமலை:கரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வரும் நிலையில் தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவினை அமல்படுத்தியுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் புராதான சின்னங்கள், பூங்காக்களை மூடப்பட்டுள்ளது.

தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூர் அணை சுற்றுலா தளத்திற்கு திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் போன்ற மாவட்டங்களை சேர்ந்தவர்களும் கர்நாடகா, ஆந்திரா கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில், கரோனா கட்டுப்பாட்டின் அடிப்படையில் சாத்தனூர் அணை பூங்கா மற்றும் முதலைப் பண்ணை ஆகியவை நேற்று முன்தினம் (ஏப்.21) முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. சாத்தனூர் அணையின் நுழைவாயிலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அவர்களின் உத்தரவின் பேரில் பொதுப்பணித் துறை பணியாளர்கள் பூட்டி சீல் வைத்தனர்.

சாத்தனூர் அணை பூங்கா அரசின் மறு உத்தரவு வரும்வரை மூடப்பட்டிருக்கும், அதுவரை சுற்றுலாப் பயணிகள் யாரும் சாத்தனூர் அணைக்கு வரவேண்டாம் என மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில் பொதுப்பணித்துறை சார்பில் ஆங்காங்கே அறிவிப்பு பலகை அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:மாநில அரசுக்கும் 150 ரூபாயில் தடுப்பூசியை வழங்க ஸ்டாலின் கோரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details