தமிழ்நாடு

tamil nadu

தலையில் சாக்கு பை போட்டு விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்

By

Published : Jan 14, 2020, 5:28 PM IST

திருவண்ணாமலை: விவசாயிகள் தலையில் சாக்கு பையை போட்டுக்கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பொங்கல் பானையில் மண்ணை போட்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

farmers
farmers

திருவண்ணாமலையில் உழவர் பேரவை சார்பில் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கவேண்டும் என்பதை வலியுறுத்தியும், 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வேலை வழங்கவேண்டும், வேலை செய்ததற்கான நிலுவைத் தொகையினை உடனடியாக வழங்கவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தலையில் சாக்குத் துணியை போட்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தனியாருக்கு சொந்தமான தரணி சர்க்கரை ஆலையில், கரும்பு விவசாயிகளுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகையை பொங்கலுக்கு முன்பே தருவதாக உறுதி அளித்ததாகவும், ஆனால் இதுவரை தனியார் சர்க்கரை ஆலை தங்களுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகையை தரவில்லை என்றும் குற்றஞ்சாட்டி பொங்கல் பானையில் மண்ணை போட்டு தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.

தலையில் சாக்கு பையை போட்டுக்கொண்டு விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் வழங்கவேண்டிய வேலை, 40 நாட்கள் மட்டுமே தரப்பட்டுள்ளது. அதிலும் 20 நாட்களுக்கு தரவேண்டிய கூலி தரப்படாமல் நிலுவையில் உள்ளதால் இதனை உடனடியாக வழங்க வலியுறுத்தினர்.

மேலும் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலம் வழங்கவேண்டிய தொகை வழங்கப்படாததாலும், பொங்கல் பானையில் மண்ணை போட்டு தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர்.

மேலும், தமிழ்நாடு அரசு உடனடியாக தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

இதையும் படிங்க: ’விற்பனையானாலும் விலையில்ல’ - மஞ்சள் விவசாயிகள் வேதனை

Intro:திருவண்ணாமலையில் ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் தலையில் சாக்கு பை போட்டுக்கொண்டு, வைத்த பொங்கலில் மண்ணை போட்டு நூதன ஆர்ப்பாட்டம்.
Body:திருவண்ணாமலையில் ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் தலையில் சாக்கு பை போட்டுக்கொண்டு, வைத்த பொங்கலில் மண்ணை போட்டு நூதன ஆர்ப்பாட்டம்.

திருவண்ணாமலையில் உழவர் பேரவை சார்பில் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வேலை வழங்க வேண்டுமென்றும் வேலை செய்ததற்கான நிலுவைத் தொகையினை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் நூதன முறையில் கண்டன ஆர்பாட்டம் நடத்தினர்.

தனியாருக்கு சொந்தமான தரணி சர்க்கரை ஆலையில் கரும்பு விவசாயிகளுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகையை தருவதாக கடந்த மாதம் நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டத்தில் பொங்கலுக்கு முன்பே நிலுவைத் தொகையை விவசாயிகளுக்கு தருவதாக உறுதி அளித்ததாகவும் ஆனால் இதுவரை தனியார் சர்க்கரை ஆலை தங்களுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகையை தரவில்லை என்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் வழங்க வேண்டிய வேலை 40 நாட்கள் மட்டுமே தரப்பட்டுள்ளது அதிலும் 20 நாட்களுக்கு தரவேண்டிய கூலி நிலுவையில் உள்ளதாகவும் இதனை உடனடியாக வழங்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாத காரணத்தினால் 4 லட்சம் நெல் மூட்டைகளின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும் இதனால் காலி சாக்குப் பைகளை தலையில் போட்டுக்கொண்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொங்கல் இன்னும் இரண்டு நாட்களில் இருக்கும் நிலையில் விவசாயிகளின் கரும்புக்கான நிலுவைத் தொகை வழங்காததாலும் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலம் வழங்க வேண்டிய தொகையும் வழங்காததாலும் பொங்கல் பானையில் மண்ணை போட்டு தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர்.

தமிழக அரசு உடனடியாக நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கவும் தரணி சக்கரை ஆலை தர வேண்டிய நிலுவைத் தொகையினை மாவட்ட நிர்வாகம் உடனடியாக பெற்றுத் தரவும் ஊரக வேலை வாய்ப்பில் நிலுவையில் உள்ள தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது.

Conclusion:திருவண்ணாமலையில் ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் தலையில் சாக்கு பை போட்டுக்கொண்டு, வைத்த பொங்கலில் மண்ணை போட்டு நூதன ஆர்ப்பாட்டம்.

ABOUT THE AUTHOR

...view details