தமிழ்நாடு

tamil nadu

'மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்' - அரசு மருத்துவர்கள் போராட்டம்!

By

Published : Oct 13, 2019, 11:04 PM IST

திருவண்ணாமலை: மத்திய அரசு வழங்கும் ஊதியத்திற்கு இணையான ஊதியத்தை தமிழ்நாடு அரசும் வழங்க வேண்டுமென அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Thiruvannamalai

அரசு மருத்துவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் ஊதியத்தை போலவே, தமிழ்நாடு அரசும் வழங்க வேண்டுமென, திருவண்ணாமலை அரசு மருத்துவமனை முன்பு தமிழ்நாடு அரசு மருத்துவ சங்கத்தினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் மருத்துவர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மருத்துவ சங்க உறுப்பினர்கள், தமிழ்நாடு அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து அங்கு, மருத்துவ சங்கத்தின் வருங்கால திட்டங்கள் குறித்தும் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

திருவண்ணாமலை அரசு மருத்துவமனை

இதையும் படிங்க:

தவறான சிகிச்சையால் கேட்புத்திறன் இழந்த பெண்: மருத்துவ இயக்குநர் பதிலளிக்க உத்தரவு

Intro:மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்று கோரி தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் சார்பில் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது.Body:மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்று கோரி தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் சார்பில் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த சங்க உறுப்பினர்கள் இந்த பொதுக்குழு கூட்டம் மற்றும் தர்ணா போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 100 பேர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் டாக்டர் செந்தில்குமார் அவர்களின் தலைமையில் இந்த தர்ணா போராட்டம் நடைபெற்றது.

தி.மலை அரசு மருத்துவ
கல்லூரி மருத்துமனை
இயல் கூடம் முன்பு தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை மருத்துவர்கள் எழுப்பினர்.

பின்னர் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டமும் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் சங்கத்தின் வருங்கால திட்டங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.Conclusion:மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்று கோரி தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் சார்பில் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது.

ABOUT THE AUTHOR

...view details