தமிழ்நாடு

tamil nadu

காலாவதியான சாக்லேட்.. குழந்தைகள் உயிரோடு விளையாடும் நிறுவனம்!

By

Published : Feb 2, 2023, 10:14 AM IST

காலாவதியான சாக்லேட் பொருட்களை அனுப்பிய நிறுவனம் மீது தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விற்பனை பிரதிநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.

காலாவதியான சாக்லேட் அனுப்பிய நிறுவனம்
காலாவதியான சாக்லேட் அனுப்பிய நிறுவனம்

காலாவதியான சாக்லேட் அனுப்பிய நிறுவனம்

திருவண்ணாமலை:திருவண்ணாமலை நகர் பகுதியை சேர்ந்தவர் மணிமாறன். இவர் கடந்த பல ஆண்டுகளாக அர்ச்சனா ஏஜென்சி என்ற பெயரில் சாக்லேட், ஊதுபத்தி, குழந்தைகள் பால்பாட்டில், ஜெல்லி மிட்டாய் உள்ளிட்ட பொருட்களை திருவண்ணாமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் மொத்த விற்பனை செய்து வருகிறார்.

குறிப்பாக சாக்லேட் ஜெல்லி மிட்டாய் பொருட்களை புதுச்சேரியில் உள்ள மொத்த வியாபாரியிடம் இருந்து பெற்று திருவண்ணாமலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கடைகளில் விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான சாக்லேட் மற்றும் ஜெல்லி மிட்டாய் அடங்கிய பொருள்களை மணிமாறன் வாங்கியுள்ளார்.

இது அனைத்தும் காலாவதியான பொருட்களாக இருப்பதால் வாங்கிய அனைத்து பொருட்களையும் கடைகளில் விற்பனை செய்யாமல் மீண்டும் மொத்த வியாபாரிக்கு திருப்பி அனுப்பியுள்ளார். இதுகுறித்து மொத்த வியாபாரிடம் காலாவதியான பொருட்கள் அனுப்பியுள்ளதாக விவரம் கேட்டுள்ளார்.

ஆனால் சாக்லேட் விற்பனை நிறுவனத்தில் உரிய பதிலளிக்காமல் மெத்தனமாக பதில் அளித்ததாகவும், குழந்தைகள் சாப்பிடும் சாக்லேட் மற்றும் ஜெல்லி மிட்டாய்களை காலாவதி ஆகியும் அதனை விற்பனை செய்ய தன்னால் இயலவில்லை என்றும், இது போன்று காலாவதியான பொருட்களை குழந்தைகள் சாப்பிட்டால் உடல் நலத்திற்கு கேடு என்று சாக்லேட் மற்றும் ஜெல்லி மிட்டாய்களை விற்பனை செய்யாமல் இருந்ததாக தெரிவித்தார்.

மேலும் இந்தியா முழுவதும் யூ ஃபுட் என்ற சாக்லேட் விற்பனை நிறுவனம் பல பகுதிகளில் இதுபோன்று காலாவதியான தின்ப்பண்டங்களை அனுப்பியுள்ளதாகவும், உடனடியாக தமிழ்நாடு அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: திமுக கவுன்சிலரின் கணவர் வீடு புகுந்து தாக்குதல் - வீடியோவால் பரபரப்பு!

ABOUT THE AUTHOR

...view details