தமிழ்நாடு

tamil nadu

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள்.. இவர்கள் தான் - ஐஜி கண்ணன் பேட்டி

By

Published : Feb 12, 2023, 4:48 PM IST

திருவண்ணாமலையில் ஒரே நாளில் இரவில் 4 ஏடிஎம் மையங்களில் கேஸ் வெல்டிங் மூலம் ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து சுமார் ரூ.75 லட்சம் வரை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

ஒரே நாளில் இரவில் 4 ஏடிஎம் மையங்களில் கொள்ளை- திருவண்ணாமலையில் பரபரப்பு!
ஒரே நாளில் இரவில் 4 ஏடிஎம் மையங்களில் கொள்ளை- திருவண்ணாமலையில் பரபரப்பு!

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள்.. இவர்கள் தான் - ஐஜி கண்ணன் பேட்டி

திருவண்ணாமலை:திருவண்ணாமலை மாவட்டத்தில் மூன்று எஸ்.பி.ஐ ஏடிஎம் மற்றும் ஒன்இந்தியா ஏடிஎம் என 4 ஏடிஎம்களில் அடையாளம் தெரியாத நபர்கள் சுமார் 75 லட்சம் ரூபாய் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து வடக்கு மண்டல காவல்துறை தலைவர் கண்ணன் தலைமையில், மூன்று காவல்துறை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, திருவண்ணாமலைக்கு வரும் 9 சாலையில் உள்ள சிசிடிவி காட்சி பதிவுகளைக் கொண்டு காவல் துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், கொள்ளைச் சம்பவம் நடைபெற்ற ஏடிஎம் மையத்தில் வடக்கு மண்டல காவல் துறைத் தலைவர் கண்ணன் நேரில் ஆய்வு செய்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர், 'ஏடிஎம் இயந்திரத்தை முழுமையாக கையாளத் தெரிந்து வைத்துள்ள வடமாநிலத்தவர்கள் தான் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக, ஏடிஎம் இயந்திரத்தில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளது. அதனைக் கொண்டு ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளை அடித்த மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகிறோம். கொள்ளையர்கள் குழுவாக வந்து கொள்ளை சம்பத்தில் ஈடுபட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

அதுமட்டுமில்லாமல் வெளி மாவட்ட காவல் துறையினரும் இந்த கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். ஒரு காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் மற்றொரு தனிப்படைகள் வெளிமாநிலம் சென்றுள்ளது. கேஸ் வெல்டிங் மூலம் 4 ஏடிஎம்-களை உடைத்து சுமார் ரூ.75 லட்சம் வரை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

மேலும், காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபடாமல் இருந்தால் அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் இதுபோன்ற கொள்ளைச் சம்பவங்கள் மகாராஷ்டிரா, ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடைபெற்றுள்ளது. காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு கொள்ளையர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்' என வடக்கு மண்டல காவல்துறை தலைவர் கண்ணன் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.

இதையும் படிங்க:இன்ஸ்டாகிராமில் கடன் தேடுபர்களே குறி! பெண்களிடம் ரூ.40 லட்சம் மோசடி செய்தவர் சென்னையில் கைது!

ABOUT THE AUTHOR

...view details