தமிழ்நாடு

tamil nadu

திருவண்ணாமலை கார்த்திகை மாத பௌர்ணமி கிரிவலம்: 10 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு!

By

Published : Dec 13, 2019, 7:39 AM IST

திருவண்ணாமலை: கார்த்திகை மாத பௌர்ணமியை முன்னிட்டு குளிரையும் பொருட்படுத்தாமல் லட்சகணக்கான பக்தர்கள் கிரிவலத்தில் பங்கேற்றனர்.

திருவண்ணாமலை கார்த்திகை மாத பௌர்ணமி கிரிவலம்
திருவண்ணாமலை கார்த்திகை மாத பௌர்ணமி கிரிவலம்

திருவண்ணாமலையில் அண்ணாமலையார் திருக்கோயில் கார்த்திகை தீபம் கடந்த 10 நாட்களாக விமரிசையாக நடைபெற்று முடிந்தது. பத்தாம் தேதி அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலையில் பஞ்சமூர்த்திகள் அண்ணாமலையார் கோயிலின் கொடிமரம் அருகில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து, ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளியபோது கொடிமரம் அருகே அகண்ட தீபமும் கோயிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள மலையின் மீது மகா தீபமும் ஏற்றப்பட்டது.

மகாதீபம் ஆனது அடுத்த 10 நாட்களுக்கும் மலையின் உச்சியில் எரிந்து கொண்டிருக்கும். இறைவன் ஜோதி வடிவில் காட்சியளிக்கும் மலையின் அடிவாரத்தில் உள்ள 14 கி.மீ. நீளம் கொண்ட கிரிவலப்பாதையில் கார்த்திகை மாதப் பவுர்ணமியை முன்னிட்டு நேற்று காலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில், குறைந்த அளவில்தான் பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.

திருவண்ணாமலை கார்த்திகை மாத பௌர்ணமி கிரிவலம்

இருப்பினும் மாலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் உற்சாகத்துடன் கிரிவலம் சென்றனர். இரவு நேரங்களிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் மூலிகைச் செடிகள் நிறைந்த மலையைச் சுற்றியுள்ள கிரிவலப்பாதையில் பக்தர்கள் கிரிவலம் சென்று அண்ணாமலையார் திருவருளையும் வேண்டினர். இந்த ஆண்டு கார்த்திகை தீபம் முடிந்த மறுநாள் பௌர்ணமி கிரிவலம் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க...பேரறிவாளனின் பரோல் மேலும் ஒரு மாத காலம் நீட்டிப்பு!

Intro:கார்த்திகை மாத பௌர்ணமியை முன்னிட்டு குளிரையும் பொருட்படுத்தாமல் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம்.
Body:கார்த்திகை மாத பௌர்ணமியை முன்னிட்டு குளிரையும் பொருட்படுத்தாமல் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் கார்த்திகை மாத பவுர்ணமியை முன்னிட்டு காலையில் குறைந்த அளவு பக்தர்கள் கிரிவலம் சென்ற நிலையில் மாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.

திருவண்ணாமலையில் அண்ணாமலையார் திருக்கோயில் கார்த்திகை தீபம் கடந்த 10 நாட்களாக விமரிசையாக நடைபெற்று முடிந்தது. பத்தாம் தேதி அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலையில் பஞ்சமூர்த்திகள் அண்ணாமலையார் கோயிலின் கொடிமரம் அருகில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து, ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளியபோது கொடிமரம் அருகே அகண்ட தீபமும் கோயிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள மலையின் மீது மகா தீபமும் ஏற்றப்பட்டது.

மகாதீபம் ஆனது அடுத்த 10 நாட்களுக்கும் மலையின் உச்சியில் எரிந்து கொண்டிருக்கும். இறைவன் ஜோதி வடிவில் காட்சியளிக்கும் மலையின் அடிவாரத்தில் உள்ள 14 KM நீளம் கொண்ட கிரிவலப்பாதையில் கார்த்திகை மாதப் பவுர்ணமியை முன்னிட்டு காலை முதல் குறைந்த அளவில் பக்தர்கள் கிரிவலம் வந்தனர். இருப்பினும் மாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உற்சாகத்துடன் கிரிவலம் வந்தனர். இரவு நேரங்களிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் மூலிகைச் செடிகள் நிறைந்த மலையைச் சுற்றியுள்ள கிரிவலப்பாதையில் கிரிவலம் வந்து அண்ணாமலையார் திருவருளையும் வேண்டினர். இந்த ஆண்டு கார்த்திகை தீபம் முடிந்த மறுநாள் பௌர்ணமி கிரிவலம் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Conclusion:கார்த்திகை மாத பௌர்ணமியை முன்னிட்டு குளிரையும் பொருட்படுத்தாமல் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம்.

ABOUT THE AUTHOR

...view details