தமிழ்நாடு

tamil nadu

நகை கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை... கூட்டுறவு வங்கியில் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிருப்பு போராட்டம்...

By

Published : Sep 27, 2022, 6:29 PM IST

திருவண்ணாமலை சாத்தனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நகை கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை என்று குற்றம்சாட்டி பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நகை கடன் தள்ளுபடி ஆகாததால் கூலித் தொழிலாளி தீக்குளிக்க முயற்சி!
கூட்டுறவு வங்கியில் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சாத்தனூர் எச்.எச் 500 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் தமிழ்நாடு அரசு அறிவித்த நகை கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து தீக்குளிக்கவும் முயன்றனர். இதுகுறித்து தகவலறிந்த சாத்தனூர் அணை போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.

கூட்டுறவு வங்கியில் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

அதன்பின் அவர்கள் கலைந்து சென்றனர். இதனிடையே அவர்கள் கூறுகையில், 14, 16, 17,18 கிராம்களில் நகை கடன் பெற்ற நிலையில் 100 கிராமிற்கு மேலாக நகை வைத்தது போல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் நகை கடன் தள்ளுபடி கிடைக்கவில்லை. முறையான ஆவணங்களை பதிவு செய்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தனர்.

இதையும் படிங்க:இந்து இளைஞர் முன்னணி நகரத் தலைவரின் கார் கண்ணாடி உடைப்பு

ABOUT THE AUTHOR

...view details