தமிழ்நாடு

tamil nadu

தவணை முறை திட்டம்: ஆயிரம் கோடி ரூபாய் சுருட்டல் - ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த மக்கள்

By

Published : Dec 19, 2022, 10:48 PM IST

விஆர்எஸ் ஃபண்ட் நிறுவனம், தவணை முறை திட்டம் என்ற பெயரில் ரூபாய் 1000 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளதாக 300க்கும் மேற்பட்டோர் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த மக்கள்
ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த மக்கள்

ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த மக்கள்

திருவண்ணாமலை:செய்யாறு கிராமத்தில் தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வரும் விஆர்எஸ் ஃபண்ட் நிறுவனம் தீபாவளி ஃபண்ட், பொங்கல் ஃபண்ட் என பெயரில் மளிகை சாமான்கள், வீட்டு உபயோக பொருட்கள், தங்க காசுகள், வெள்ளி காசுகள் உள்ளிட்டவை தருவதாக தெரிவித்து தவணை முறை திட்டம் தொடங்கி திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏஜெண்டுகள் மூலம் பல லட்சம் பேரிடம் இருந்து சுமார் ரூபாய் 1000 கோடிக்கு மேல் பணம் வசூல் செய்துள்ளனர்.

தீபாவளி முடிந்த நிலையில் தவணை முறையில் பணம் கட்டியவர்களுக்கு உரிய பொருட்கள் வழங்காமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் சம்சு மொய்தீன் கடந்த சில மாதங்களாக தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் ஏஜென்ட்கள் செய்யாற்றில் உள்ள நிறுவனத்தில் போராட்டம் நடத்தியும் காவல்துறையில் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட ஏஜென்ட்கள் பொதுமக்கள் என 300க்கும் மேற்பட்டோர் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்க குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் கட்டிய பணத்தினை திரும்ப பெற்றுதர வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

இதையும் படிங்க: பறந்த செருப்புகள்: கரூரில் அதிமுக - திமுக மோதல்!

ABOUT THE AUTHOR

...view details