தமிழ்நாடு

tamil nadu

சட்ட விரோத கருக்கலைப்பு - போலி பெண் மருத்துவர் கைது

By

Published : Jul 29, 2021, 11:51 AM IST

செங்கம் பகுதியில் சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்த போலி பெண் மருத்துவர் கைது செய்யப்பட்டார்.

போலி மருத்துவர் கைது
போலி மருத்துவர் கைது

திருவண்ணாமலை: செங்கம் பகுதியைச் சேர்ந்தவர் ரேணுகா(55), பிளஸ் 2 மட்டுமே படித்துள்ள இவர், செங்கம் பேருந்து நிலையம் அருகே கிளினிக் வைத்து மருத்துவம் பார்த்து வந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து செங்கம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அருளானந்தம் தலைமையில் அலுவலர்கள் செங்கம் பகுதியில் சோதனை நடத்த சென்றனர்.

போலி மருத்துவர் தப்பியோட்டம்

அப்போது, அலுவலர்கள் வருவதை அறிந்து ரேணுகா மற்றும் அவரது பணியாளர்கள் தப்பியோடினர். இதையடுத்து கிளினிக்கில் உள்ள பொருட்கள் பறிமுதல் செய்து சீல் வைக்கப்பட்டது. மேலும் தப்பியோடிய போலி மருத்துவர் ரேணுகாவை காவல்துறையினர் தேடிவந்தனர்.

இந்த நிலையில் நேற்று (ஜூலை 28) கிளினிக்கிற்கு வந்த ரேணுகா அலுவலர்கள் வைத்த சீலை அகற்றிவிட்டு, மீண்டும் மருத்துவம் பார்த்துள்ளார்.

தகவலறிந்து காவல்துறையினர் மற்றும் மருத்துவர் அருளானந்தம் அங்கு விரைந்தனர். அப்போது, போலி மருத்துவர் ரேணுகா சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்து கொண்டிருந்தது தெரிய வந்தது. காவல்துறையினர் அவரை கைது செய்து கிளினிக்கிற்கு மீண்டும் சீல் வைத்தனர்.

மீண்டும் அதே குற்றம்

தலைமை மருத்துவர் அளித்த புகாரின் பேரில் செங்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ரேணுகா கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:6 மாதங்களில் 100 பேர் குண்டர் சட்டத்தில் கைது - காவல் கண்காணிப்பாளர் தகவல்

ABOUT THE AUTHOR

...view details