தமிழ்நாடு

tamil nadu

திருவண்ணாமலை அருகே காரில் வந்து ஆடுதிருடிய கும்பல் கைது!

By

Published : Oct 5, 2020, 1:59 AM IST

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் காரில் வந்து ஆடுதிருடிய நான்கு நபர்களை கைது செய்துள்ள காவல்துறையினர், ஆடு திருடுவதற்கு பயன்படுத்திய கார், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

goat theft in vandavasi
திருவண்ணாமலை அருகே காரில் வந்து ஆடுதிருடிய கும்பல் கைது

திருவண்ணாமலை: வந்தவாசியில் ஆடுதிருடிய நான்கு நபர்கள் கைது செய்துள்ள காவல்துறையினர் அவர்களிடமிருந்து 14 ஆடுகளை மீட்டுள்ளனர். மேலும், ஆடு திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.

டிஎஸ்பி தங்கராமன் தலைமையில் மும்முனி கூட்டு சாலையில் வாகன சோதனையின்போது, காரில் வந்த இவர்கள் காவல்துறையினரின் கேள்விக்கு முன்னுக்குப்பின் முரணான பதிலை அளித்துள்ளனர்.

ஆடுதிருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட கார்

தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் செம்பேடு கிராமத்தைச் சேர்ந்த வெள்ளிகண்ணன், முரளி, மங்கலம் மாமண்டூர் கிராமத்தைச் சேர்ந்த வேலுசாமி, வந்தவாசி பெரிய காலனியைச் சேர்ந்த சீனிவாசன் என்பதும், இவர்கள் காரில் வந்து ஆடுகளை திருடிச் சென்று விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அந்த நால்வரும் கைது செய்யப்பட்டு காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதையும் படிங்க: ஆதம்பாக்கத்தில் நான்கு கஞ்சா வியாபாரிகள் கைது!

ABOUT THE AUTHOR

...view details