தமிழ்நாடு

tamil nadu

கர்நாடகா-திருவண்ணாமலை சரக்கு வேனில் கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்

By

Published : Jun 2, 2021, 3:52 PM IST

திருவண்ணாமலை: கர்நாடகாவிலிருந்து சரக்கு வேனில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

கர்நாடகாவிலிருந்து மதுபாட்டில்கள் கடத்தல்: நான்கு பேர் கைது!
கர்நாடகாவிலிருந்து மதுபாட்டில்கள் கடத்தல்: நான்கு பேர் கைது!

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த களம்பூர் அருகேவுள்ள முக்குரும்பை கூட்டு ரோடில் களம்பூர் காவல் துறையினர் நேற்று (ஜூன்.02) வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர் .

அப்போது அவ்வழியாக சென்ற சரக்கு வேனை நிறுத்தி காவல் துறையினர் சோதனை செய்தனர். அதில், 13 பெட்டிகளில் 660 வெளி மாநில மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து வேனில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் ஆரணியை அடுத்த முக்குரும்பை கிராமத்தைச் சேர்ந்த முருகன் (35), பார்த்திபன் (31) , மகேந்திரன் (40) , திலிப்குமார் என்பது தெரியவந்தது.

மேலும், இவர்கள் கர்நாடக மாநிலத்திலிருந்து மதுபாட்டில்களைக் கடத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, நான்கு பேரையும் கைது செய்த காவல் துறையினர், வேனையும் மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

பின்னர், அவர்களை போளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல் துறையினர், அவர்களை சிறையில் அடைத்தனர் .

ABOUT THE AUTHOR

...view details