தமிழ்நாடு

tamil nadu

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல 11ஆவது முறையாக தடை

By

Published : Jan 27, 2021, 8:17 AM IST

திருவண்ணாமலை: கரோனா தொற்று காரணமாக திருவண்ணாமலையில் 11ஆவது முறையாக பக்தர்கள் பௌர்ணமி கிரிவலம் செல்ல தடை விதித்து ஆட்சியர் சந்தீப் நந்துாரி உத்தரவிட்டுள்ளார்.

பௌர்ணமி கிரிவலம்
பௌர்ணமி கிரிவலம்

திருவண்ணாமலையில் உள்ள, அண்ணாமலையார் மலையை சிவனாக வணங்கி, பக்தர்கள் வழிபடுகின்றனர். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாளில் வெளியூர்களில் இருந்தும், வெளிமாநில, மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள், கிரிவலம் சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

கரோனா தொற்று ஊரடங்கால், கடந்தாண்டு மார்ச் மாதம் முதல், பௌர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஜனவரி 28ஆம் தேதி பௌர்ணமியையொட்டி 28ஆம் தேதி நள்ளிரவு 1.34 மணி முதல் 29ஆம் தேதி நள்ளிரவு 1.35 மணி வரை பௌர்ணமி கிரிவலம் செல்ல தடை விதித்து மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார்.

திருவண்ணாமலையில் பக்தர்கள் பௌர்ணமி கிரிவலம் செல்ல 11ஆவது முறையாக தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கிராம சபைக் கூட்டங்களின் முக்கியத்துவம் என்ன? - தன்னாட்சி அமைப்பின் செயலர் பிரத்யேக நேர்காணல்

ABOUT THE AUTHOR

...view details