தமிழ்நாடு

tamil nadu

பள்ளியின் சுவற்றை அனுமதியின்றி இடித்துத்தள்ளிய திமுக பிரமுகர்கள்

By

Published : Oct 7, 2022, 3:21 PM IST

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்றின் சுவற்றை திமுக பிரமுகர்கள் இடித்துத் தள்ளியுள்ளனர்.

Etv Bharatபள்ளி சுவற்றை இடித்த திமுக பிரமுகர்கள்
Etv Bharatபள்ளி சுவற்றை இடித்த திமுக பிரமுகர்கள்

திருவண்ணாமலைமாவட்டத்தில் மக்களின் வரிப்பணத்தில் ரூ.5.83 லட்சம் செலவில் 8 மாதங்களுக்கு முன் கட்டப்பட்ட அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிள் சுற்றுச்சுவற்றை திமுக பிரமுகர்கள் இடித்து தள்ளியுள்ளதாகத் தெரிகிறது.

திருவண்ணாமலை அடுத்த கீழ்பென்னாத்தூர் தொகுதிக்குட்பட்ட நீலந்தாங்கள் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பாதுகாப்புக்கருதி கடந்த பிப்ரவரி மாதம் 5 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் செலவில் பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. இந்நிலையில் இந்த சுற்று சுவற்றினை நீலந்தாங்கல் ஊராட்சி மன்ற திமுக தலைவர் மணியின் உத்தரவின்பேரில் திமுக பிரமுகர்களான பாரதி, வெங்கட், ஜெயவேல், ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட சிலர் நேற்று (ஆக-06) காலை இடித்து தள்ளியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சுற்றுச்சுவர் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளதாகக்கூறி பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் ஆகியோரிடம் தெரிவிக்காமல் சுவற்றை இடிக்க எந்தவித உத்தரவும் இன்றி, கீழ்பென்னத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் இடிக்கச்சொன்னதாகக்கூறி, மேற்கூறிய நபர்கள் சுற்றுச்சுவரை இடித்து தள்ளியுள்ளனர். இது, அந்தப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி சுவற்றை இடித்த திமுக பிரமுகர்கள்

பள்ளியின் சுற்றுச்சுவரை இடிப்பதைக்கண்டு ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், அவர்களை முற்றுகையிட்டு கேள்வி எழுப்பியதையடுத்து சுவரை இடிப்பதை கைவிட்டு அங்கிருந்து சென்றனர். மக்கள் வரிப்பணத்தில் சுமார் 6 லட்ச ரூபாயில் எட்டு மாதங்களுக்கு முன்பாக கட்டப்பட்ட பள்ளிச்சுவற்றை இடித்த இந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:அண்ணா மீது கை வைத்தால் அவ்வளவுதான்- ஏடிஎஸ்பியை மிரட்டிய திமுக பிரமுகர்

TAGGED:

demolished

ABOUT THE AUTHOR

...view details