தமிழ்நாடு

tamil nadu

பெற்றோர்கள் பேசாததால் விரக்தி: ஒரே புடவையில் புதுமண தம்பதி தூக்கிட்டு தற்கொலை!

By

Published : Jan 19, 2020, 12:33 PM IST

திருவண்ணாமலை: திருமணத்திற்கு பெற்றோர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால், விரக்தியிலிருந்த காதல் தம்பதியினர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கோலை
தற்கோலை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கருங்காலிகுப்பம் சமத்துவபுரம் கிராமத்தைச் சேர்ந்த காயத்திரி (19), ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் எடமாரிமண்டலம் குந்தவாலூர் கிராமத்தைச் சேர்ந்த தேவராஜ் (22) ஆகிய இருவரும் காதலித்து கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு இருதரப்பு பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி காதல் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணம் முடிந்த பின்னர், இருவரும் பெங்களூருவில் வசித்து வந்தாலும், பெற்றோர்கள் தங்களை மனசு மாறி ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் இருந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 13ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தேவராஜ் - காயத்திரி தம்பதி, ஆரணி அடுத்த கருங்காலி குப்பம் கிராமத்திலுள்ள தேவராஜின் சித்தி சந்திராவின் வீட்டிற்கு வந்துள்ளனர்.

மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய தருணத்தில், பெற்றோர்கள் பேச மறுப்பது இவர்கள் மத்தியில் நீங்காத துயரமாக இருந்துள்ளது. இதனால் மனமுடைந்த இத்தம்பதியினர், சித்தி வீட்டின் பின்புறமிருந்த மரம் ஒன்றில் ஒரே புடவையில் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த களம்பூர் காவல் துறை, உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஆலன், தாஹாவை என்.ஐ.ஏ விசாரிக்கக்கோரும் வழக்கு : 21ஆம் தேதி தீர்ப்பு

Intro:காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால் விரக்தியில் இருந்த காதல் தம்பதியினர் தூக்கிட்டு தற்கொலை.Body:காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால் விரக்தியில் இருந்த காதல் தம்பதியினர் தூக்கிட்டு தற்கொலை.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கருங்காலிகுப்பம் சமத்துவபுரம் கிராமத்தில் ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் எடமாரிமண்டலம் குந்தவாலூர் கிராமத்தை சேர்ந்த தேவராஜ் ( 22 ) அதே கிராமத்தை சேர்ந்த காயத்திரி ( 19 ) ஆகிய இருவரும் காதலித்து கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இருதரப்பு பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டனர்.

இதனால் இருதரப்பு பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை இல்லாத நிலையில் புதுமண காதல் ஜோடி இருந்துள்ளனர்.

மேலும் பெற்றோர்கள் யாரும் பேச்சுவார்த்தை இல்லாத காரணத்தினால் பெங்களுரில் கார் ஓட்டுனராக வேலை செய்து தேவராஜ் காயத்திரி தங்கி வந்துள்ளனர்.

மேலும் கடந்த 13ம் தேதி தேவராஜ் காயத்திரி தம்பதியினர் ஆரணி அடுத்த கருங்காலி குப்பம் கிராமத்திலுள்ள தேவராஜின் சித்தி சந்திராவின் வீட்டிற்கு பொங்கலை முன்னிட்டு வந்தாக தெரிகிறது.

இந்நிலையில் தேவராஜ் காயத்திரி ஆகிய இரு தரப்பு பெற்றோரும் இருவரிடமும் பேச்சு வார்த்தை இல்லாததை தொடர்ந்து விரக்தியில் இருந்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த இளம் காதல் தம்பதியினர் இன்று விடியற்காலை சித்தி வீட்டின் பின்புறமுள்ள புங்கமரத்தில் ஒரே புடவையில் இருவரும் இணைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

தகவலறிந்த வந்த களம்பூர் காவல் நிலைய போலீசார் காதல் ஜோடி தம்பதியினரின் சடலத்தை கைப்பற்றி உடற் கூராய்வுக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது சம்மந்தமாக களம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

காதல் திருமணம் செய்து கொண்ட சம்பவத்தால் பெற்றோர்கள் பேச்சுவார்த்தையின்றி உள்ளனர். இதனால் மனமுடைந்த இளம் காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளன.

திருமணமாகி 5 மாதங்களே ஆன இளம் தம்பதியினர் ஒன்றாக இணைந்து ஒரே புடவையில் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது கருங்காலி குப்பம் கிராமத்தில் பெரும் சோகத்தை எற்படுத்தி உள்ளன.

Conclusion:காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால் விரக்தியில் இருந்த காதல் தம்பதியினர் தூக்கிட்டு தற்கொலை.

ABOUT THE AUTHOR

...view details