தமிழ்நாடு

tamil nadu

ரேஷன் அரிசி பதுக்கல்... ஒருவர் கைது

By

Published : Oct 9, 2022, 2:52 PM IST

திருவண்ணாமலை அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 15 டன் ரேஷன் அரிசியினை பறிமுதல் செய்த காவல்துறையினர் மேலாளரை கைது செய்து, உரிமையாளரைத் தேடி வருகின்றனர்.

மாதலம்பாடி ரேஷன் அரிசி பதுக்கல்
மாதலம்பாடி ரேஷன் அரிசி பதுக்கல்

திருவண்ணாமலை:மங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மாதலம்பாடி கிராமத்தில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மங்கலம் காவல் துறைக்குக்கிடைத்த ரகசியத்தகவலின் அடிப்படையில், காவல் உதவி ஆய்வாளர் நசுருதீன் தலைமையில் காவல்துறையினர் அரிகிருஷ்ணன் என்பவரது குடோனில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்பொழுது, மேலாளர் சங்கர் என்பவர் சுமார் 15 டன் மூட்டை ரேஷன் அரிசியை பதுக்கி, லாரி மூலம் கடத்த இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து ரேஷன் அரிசி பதுக்கிய மேலாளர் சங்கரை காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் அவரிடமிருந்து 15 டன் ரேஷன் அரிசி, டெம்போ லாரி மற்றும் ஈச்சர் லாரி ஆகியவைப் பறிமுதல் செய்யப்பட்டது.

மாதலம்பாடி ரேஷன் அரிசி பதுக்கல்

மேலும் தலைமறைவாக உள்ள குடோன் உரிமையாளர் அரிகிருஷ்ணன் மற்றும் லாரி டிரைவர் ஆகியோரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கைப்பற்றப்பட்ட 15 டன் ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் புலனாய்வுத்துறை ஆய்வாளரிடம் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க:கள்ளச்சந்தையில் விற்க முயன்ற 2,765 குவிண்டால் ரேஷன் அரிசி பறிமுதல்

ABOUT THE AUTHOR

...view details