தமிழ்நாடு

tamil nadu

Viral Video - ஆண்டு விழாவில் கல்லூரி மாணவர்கள் மோதல்!

By

Published : Jul 1, 2022, 8:09 PM IST

தனியார் கல்லூரி ஆண்டுவிழாவின்போது மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.

கல்லூரி மாணவர்கள் மோதல்
கல்லூரி மாணவர்கள் மோதல்

திருவண்ணாமலை: வந்தவாசியை அடுத்த தெள்ளார் பகுதியில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் நேற்று (ஜூன் 30) ஆண்டு விழா நடைபெற்றது. அப்போது வணிகவியல் துறை மற்றும் வேதியியல் துறை மாணவர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, அது மோதலாக மாறியது.

கல்லூரி ஆண்டு விழாவிற்கு முன்பு மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், இந்த மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மோதலில் ஈடுபட்ட மாணவர்களை கல்லூரிப்பேராசிரியர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

கல்லூரி மாணவர்கள் மோதல்

மேலும், இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். தனியார் கல்லூரியில் நடந்த விழாவில் மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்ட காணொலிக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.

இதையும் படிங்க:மதுரையில் பிணையில் வந்த ரவுடி வெட்டிக்கொலை...

ABOUT THE AUTHOR

...view details