தமிழ்நாடு

tamil nadu

அண்ணாமலையார் கோயில் தை மாத உண்டியல் வசூல் எவ்வளவு தெரியுமா?

By

Published : Jan 26, 2023, 10:57 AM IST

Updated : Jan 26, 2023, 4:42 PM IST

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் தை மாத பக்தர்கள் செலுத்தியது 2 கோடியே 71 லட்சத்து 96 ஆயிரத்து 869 ரூபாய் மற்றும் 320 கிராம் தங்கம், 2684 கிராம் வெள்ளி என உண்டியல் காணிக்கை வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Annamalaiyar temple opens Thai month undial
அண்ணாமலையார் கோயிலில் தை மாத உண்டியல் திறப்பு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தை மாத உண்டியல் எண்ணும் பணி

திருவண்ணாமலை: பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாக விளங்கும் அண்ணாமலையார் திருக்கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் தை மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று (ஐன.25 )காலை நடைபெற்றது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு பல்வேறு மாவட்டம் மற்றும் வெளிமாநிலங்கள், வெளிநாட்டிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் அனுதினமும் அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு வந்து தரிசனம் செய்து செல்கின்றார்கள். குறிப்பாக தை மாதத்தில் சபரிமலை செல்லும் பக்தர்கள் மற்றும் மேல்மருவத்தூருக்கு செல்லும் பக்தர்கள் எனப் பல லட்ச பக்தர்கள் அண்ணாமலையார் கோயிலில் தரிசனம் செய்தனர்.

இந்நிலையில் அண்ணாமலையார் கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நேற்று காலையில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. அண்ணாமலையார் திருக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அசோக் குமார் முன்னிலையில் சுமார் 120 பேர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

தை மாதத்தில் அண்ணாமலையார் கோயிலுக்கு வந்து சென்ற பக்தர்கள் உண்டியல் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி நேற்று காலை தொடங்கி இரவு நிறைவு பெற்றது. இதில் 2 கோடியே 71 லட்சத்து 96 ஆயிரத்து 869 ரூபாய் மற்றும் 320 கிராம் தங்கமும், 2,684 கிராம் வெள்ளியும் பக்தர்கள் காணிக்கையாக அளித்துள்ளனர்.

இதையும் படிங்க: "படியில் பயணம் செய்யாதீங்க" அரசு பேருந்து கண்ணாடியை உடைத்த பள்ளி மாணவர்கள்!

Last Updated : Jan 26, 2023, 4:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details