தமிழ்நாடு

tamil nadu

ஆலோசனை கூட்டத்தில் கண்ணீர் விட்ட அதிமுக வேட்பாளர்!

By

Published : Mar 30, 2019, 8:42 AM IST

வேலூர்:  திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதிக்கான அதிமுக வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தான் பல தோல்விகளை கண்டவதாகவும், இருந்தபோதும் கட்சி தன் மீது நம்பிக்கை வைத்து மீண்டும் வாய்ப்பு வழங்கியுள்ளதாகவும் கூறி உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சிந்தியுள்ளார்.

அதிமுக வேட்பாளர்

திருவண்ணாமலை நாடாளுமன்ற அதிமுக கூட்டணி கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் வீரமணி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பாமக, பாஜக, தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அதிமுக வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி

உளி தாங்கும் கற்கள் தானே... மண்மீது சிலையாகும்!

அப்போது திருவண்ணாமலை நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கூட்டத்தில் பேசுகையில், "நான் தேர்தலில் பல தோல்விகளை கண்டவன். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதா எனக்கு வாய்ப்பு கொடுத்தார். நான் 250 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினேன். அப்போது அந்த வலியை தாங்கிக் கொண்டேன்.

யாருக்கில்லை போராட்டம்... கண்ணில் என்ன நீரோட்டம்!

தற்போது மீண்டும் அதிமுக இன்னொரு வாய்ப்பு கொடுத்துள்ளது என்று பேசும் போது கண்ணீர் விட்டு அழுதார் அப்போது சில நிமிடங்கள் அவர் மவுனமாக இருந்தார்.

ஒவ்வொரு பூக்களுமே...

உடனே பக்கத்தில் இருந்த ஒன்றிய செயலாளர் ரமேஷ் அவரை சமாதானம் செய்து குடிக்க தண்ணீர் கொடுத்தார். அப்போது, கூட்டத்தில் இருந்தவர்கள் நீங்கள் வெற்றி பெறுவது உறுதி என கரகோஷம் எழுப்பினர். இந்த சம்பவம் அதிமுக தொண்டர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ABOUT THE AUTHOR

...view details