தமிழ்நாடு

tamil nadu

வந்தவாசி அருகே 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

By

Published : Dec 19, 2022, 11:12 AM IST

திருவண்ணாமலை மாவட்டம் மும்முனி பைபாஸ் சாலையில் கடத்தி செல்லப்பட்ட 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது

திருவண்ணாமலையில் கடத்தி செல்லப்பட்ட 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
திருவண்ணாமலையில் கடத்தி செல்லப்பட்ட 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

திருவண்ணாமலை:வந்தவாசி அடுத்த மும்முனி பைபாஸ் சாலையில் டிஎஸ்பி கார்த்திக் தலைமையில் வந்தவாசி தெற்கு போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேன் ஒன்ரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரேஷன் அரிசி கடத்தி செல்வது தெரியவந்தது.

வேனை ஓட்டி வந்த டிரைவர் மணிகண்டன் என்பவரிடம் விசாரணை செய்தனர். விசாரணையில், அவர் செங்கல்பட்டு மாவட்டம் ஓரத்தி பகுதியில் இருந்து திருவண்ணாமலை மாவட்டம் ஆரணிக்கு 3 டன் எடையுள்ள 45 மூட்டை ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து ரேஷன் அரிசி மற்றும் சரக்கு வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களை வந்தவாசி தெற்கு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ஐயப்ப பக்தர்கள் சென்ற மினி பஸ் கவிழ்ந்து விபத்து

ABOUT THE AUTHOR

...view details