தமிழ்நாடு

tamil nadu

திருவண்ணாமலையில் ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்

By

Published : Jun 21, 2021, 9:38 PM IST

திருவண்ணாமலை: ஆரணியில் கஞ்சா மறைத்துவைத்து விற்பனை செய்தவரை காவல் துறையினர் கைதுசெய்து அவரிடமிருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.

கஞ்சா விற்பனை செய்தவர் கைது 1 கிலோ கஞ்சா பறிமுதல்
கஞ்சா விற்பனை செய்தவர் கைது 1 கிலோ கஞ்சா பறிமுதல்

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ. பவன் குமார் ரெட்டிக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி ஆரணி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் S. பாலகிருஷ்ணன் அவர்களின் மேற்பார்வையில் காவலர்கள் மற்றும் தனிப்படை காவலர்கள் இணைந்து களம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கைக்கனாதாங்கல் கிராமத்தில் சோதனை நடத்தினர்.

1 கிலோ கஞ்சா, ரூ. 7,290 பறிமுதல்

சோதனையில் பாலசுந்தரம் என்பவரிடம், ஆரணி காமக்கூர்பாளையம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த ராஜ்குமார் கஞ்சா பாக்கெட்டுகளை மறைத்துவைத்து விற்பனை செய்துகொண்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து காவல் துறையினர் ராஜ்குமாரை கைதுசெய்து அவரிடமிருந்து ஒரு கிலோ கஞ்சா மற்றும் ஏழாயிரத்து,290 ரூபாய் கைப்பற்றி நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.

ABOUT THE AUTHOR

...view details