தமிழ்நாடு

tamil nadu

ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தி வந்த இளைஞர்கள் கைது!

By

Published : Sep 5, 2020, 1:49 PM IST

திருவள்ளூர் : ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்த முயன்ற இரண்டு இளைஞர்களை சிப்காட் காவலர்கள் கைது செய்தனர்.

Two youngsters arrested for abduction cannabis in Thiruvallur
Two youngsters arrested for abduction cannabis in Thiruvallur

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அடுத்த பைபாஸ் சாலையில் சிப்காட் காவலர்கள் நேற்று (செப்.04) தீவிரமான வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி அதிவேகமாக வந்த, சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த பார்த்திபன் (வயது 21), புளியந்தோப்பைச் சேர்ந்த பிரவீன் (வயது 25) ஆகியோரை மடக்கி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் ஆந்திராவில் இருந்து 1.5 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது.

இந்த வழக்கில் தொடர்புடைய கும்மிடிப்பூண்டியை அடுத்த காயலார் மேடு கிராமத்தைச் சேர்ந்த மதன்குமார் (வயது 25), குமார நாயக்கன் பேட்டையைச் சேர்ந்த ஷாருக்கான் (வயது 20) ஆகியோரையும் காவலர்கள் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும், இருசக்கர வாகனத்தில் அதிவேகமாகச் சென்ற குற்றவாளிகளை துரத்திப் பிடிக்கும்போது இரண்டாம் நிலை காவலர் விக்னேஷ் (வயது 28) என்பவர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் காவலர்கள் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details