தமிழ்நாடு

tamil nadu

கேஸ் வெல்டிங் மூலம் பூட்டை உடைத்த அடையாளம் தெரியாத நபர்கள்!

By

Published : Aug 25, 2019, 6:18 PM IST

திருவள்ளூர்: மின்சாதன பொருட்கள், வாகன உதிரி பாகங்கள் விற்பனை நிலையம் ஆகிய இரண்டு கடைகளில் அடுத்தடுத்து கேஸ் வெல்டிங் மூலம் பூட்டை உடைத்து அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துள்ளனர்.

கேஸ் வெல்டிங் மூலம் பூட்டை உடைத்த மர்ம நபர்கள்

திருவள்ளூர் மாவட்டம் எளாவூரில் மோகன்லால் என்பவருக்கு சொந்தமாக மின்சாதனப் பொருட்கள் விற்பனை கடை இருக்கிறது. இந்நிலையில், அக்கடையின் பூட்டை கேஸ் வெல்டிங்கை பயன்படுத்தி உடைத்து உள்ளே புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் கல்லாப் பெட்டியில் இருந்த ரூபாய் பத்தாயிரமும், 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மின்கம்பிகளையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

கேஸ் வெல்டிங் மூலம் பூட்டை உடைத்து கொள்ளை.

மேலும், அருகில் உள்ள பாபு என்பவரது டயர் உள்ளிட்ட வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையில் 20 ஆயிரம் ரூபாய் பணம், டயர் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இது குறித்து ஆரம்பாக்கம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு கொள்ளையர்களை வலைவீசி தேடிவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி வியாபாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Intro:திருவள்ளூர்
அருகே மின்சாதன பொருள் மற்றும் வாகன உதிரி பாகங்கள் விற்பனை நிலையம் உள்ளிட்ட இரண்டு கடைகளில்அடுத்தடுத்து கேஸ் வெல்டிங் மூலம் பூட்டை உடைத்து 2 லட்சத்தி 80 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பணம் கொள்ளை ஆரம்பாக்கம் போலீசார் விசாரணை


...Body:திருவள்ளூர்
அருகே மின்சாதன பொருள் மற்றும் வாகன உதிரி பாகங்கள் விற்பனை நிலையம் உள்ளிட்ட இரண்டு கடைகளில்அடுத்தடுத்து கேஸ் வெல்டிங் மூலம் பூட்டை உடைத்து 2 லட்சத்தி 80 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பணம் கொள்ளை ஆரம்பாக்கம் போலீசார் விசாரணை


திருவள்ளூர் மாவட்டம் எளாவூரில் மோகன்லால் என்பவருக்கு சொந்தமான
மின்சாதனப் பொருட்கள் விற்பனையகத்தின்
பூட்டை கேஸ் வெல்டிங் முறையில் பற்ற வைத்து உடைத்து உள்ளே புகுந்து மர்ம நபர்கள் கல்லாப் பெட்டியில் இருந்த பணம் பத்தாயிரம்
ரூபாய் மற்றும் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான
மின்கம்பிகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் அருகிலிருந்த
பாபு
என்பவரது டயர் உள்ளிட்ட வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையில் 20 ஆயிரம் ரூபாய் பணம் டயர் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து சென்றனர் கொள்ளை சம்பவம் குறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணைமேற்கொண்டு மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர் அடுத்தடுத்து இரண்டு கடைகளில் கேஸ் வெல்டிங் மூலம் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதி வியாபாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது....Conclusion:

ABOUT THE AUTHOR

...view details