தமிழ்நாடு

tamil nadu

இரண்டாவது நாளாக பள்ளி புறக்கணிப்பு

By

Published : Jun 14, 2022, 5:23 PM IST

Updated : Jun 14, 2022, 6:56 PM IST

ஆதி திராவிடர்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கிய இலவச வீட்டு மனைப்பட்டாவில் வீடு கட்டிக் கொள்ள அனுமதிக்கக்கூடாது என்று வலியுறுத்தி கிராமப் பொதுமக்கள் தங்களது குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.

இரண்டாவது நாளாக பள்ளியைப் புறக்கணித்து போராடும் மாணவர்கள்
இரண்டாவது நாளாக பள்ளியைப் புறக்கணித்து போராடும் மாணவர்கள்

திருவள்ளூர்: ஆர்.கே. பேட்டை அருகே ராஜாநகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அரசு உயர் நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.

இந்த கிராமத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிதிராவிட சமுதாயத்தைச் சேர்ந்த 100 குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு வழங்கிய இலவச வீட்டு மனையில், தற்போது வீடு கட்டி குடியேற மற்றொரு சமுதாய மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

மனித உரிமை கழகம் உத்தரவின்பேரில், கடந்த வாரம் ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனைப்பட்டாவை சர்வே செய்து பயனாளிகளுக்கு வருவாய்த்துறையினர் வழங்கினர். இதனைக்கண்டித்து கடந்த சில தினங்களாக ராஜநகரம் கிராமத்தைச்சேர்ந்த பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கிராமத்திற்கு அருகில் ஆதி திராவிடர்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கிய இலவச வீட்டு மனைப்பட்டாவில் வீடு கட்டிக் கொள்ள அனுமதிக்க கூடாது என்று வலியுறுத்தி, கிராமப்பொதுமக்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் எதிர்ப்பைத்தெரிவித்து வருகின்றனர். இதனால், கோடை விடுமுறைக்குப் பிறகு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாள் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்தனர்.

அதனைத்தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் மாணவ மாணவிகள் 300-க்கும் மேற்பட்டோர் பள்ளிக்குச் செல்லாமல் புறக்கணித்ததால் பள்ளி வெறிச்சோடி காணப்பட்டது. ஆசிரியர்கள் மட்டும் பணிக்கு வந்திருக்கின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி மற்றும் கிராமத்தில் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:"ஒற்றைத்தலைமை வேண்டும்": ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கோஷம்!

Last Updated :Jun 14, 2022, 6:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details