தமிழ்நாடு

tamil nadu

காங்.மாணவர் அணித் தலைவரின் பிரியாணி விருந்து.. 50 பேர் மீது வழக்குப் பதிவு!

By

Published : Jul 19, 2020, 11:44 AM IST

திருவள்ளூர்: ஊரடங்கை மீறி காங்கிரஸ் கட்சியின் மாநில மாணவர் அணித் தலைவரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டதாகக் கூறி 50 பேர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

திருவள்ளூரில் பிரியாணி விருந்து  திருவள்ளூர் செய்திகள்  thiruvallur news  thiruvallur briyani treat  congrss students wing leaders bday  காங்கிரஸ் மாணவரணி தலைவரின் பிரியாணி விருந்து
காங்கிரஸ் மாணவரணி தலைவரின் பிரியாணி விருந்து..50 பேர் மீது வழக்குப் பதிவு

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் அசுவத்தாமன். காங்கிரஸ் கட்சியின் மாநில மாணவர் அணித் தலைவரான இவர், தனது பிறந்தநாளை திருவள்ளூர் மாவட்டம் புட்லார் கிராமத்தில் உள்ள தனது கல்லுாரி நண்பரான ராமச்சந்திரனுடன் கொண்டாடியுள்ளார்.

வியாசர்பாடியிலிருந்து சுமார் 50 நபர்களை அழைத்துவந்த இவர், பிரியாணி விருந்துடன் பிறந்தநாளைக் கொண்டாடுவதாக செவ்வாப்பேட்டை காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும், முகக்கவசம் அணியாமலும் பிறந்தநாள் கொண்டாடிய அசுவத்தாமன் உள்பட 50 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

மேலும், அரசின் விதிமுறைகளை மீறியதாகக் கூறி 7 கார்கள், 14 இரு க்கர வாகனங்களையும் பறிமுதல்செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க:சிசிடிவி: பட்டப்பகலில் ரூ. 1.5 லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனம் திருட்டு!

ABOUT THE AUTHOR

...view details