தமிழ்நாடு

tamil nadu

முதலமைச்சர் ஸ்டாலின் போராடி பெற்றது 7.5 % இட ஒதுக்கீடு - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

By

Published : Mar 1, 2022, 8:10 AM IST

Updated : Mar 1, 2022, 1:38 PM IST

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது நடத்திய போராட்டத்தின் விளைவாக 337 எம்பிபிஎஸ் மாணவர்கள் உள்பட 544 மாணவர்கள் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டால் பயனடைந்துள்ளனர் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் போராடி பெற்றது 7.5 % இட ஒதுக்கீடு - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
முதலமைச்சர் ஸ்டாலின் போராடி பெற்றது 7.5 % இட ஒதுக்கீடு - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

திருவள்ளூர்:அண்மையில் பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை முடிவடைந்த நிலையில் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு. நாசர் தலைமையில் நடைபெற்றது.

இதில், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலை வகித்தார் சிறப்பு அழைப்பாளராக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கலந்துகொண்டு விழா பேருரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், "இந்த 100 மருத்துவக் கல்லூரி மாணவர்களின் சேர்க்கையோடு தமிழகத்தைப் பொறுத்தவரைப் புதிதாக இந்த ஆண்டு எம்ஸ கல்லூரி மருத்துவ மாணவர்களைச் சேர்த்து 1550 மாணவர்கள் இந்த ஆண்டு சேர்க்கப்பட உள்ளனர்.


7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் மாணவர்கள் தமிழ்நாட்டில் பயன்பெற்றுள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது நடத்திய போராட்டத்தின் விளைவாக 337 எம்பிபிஎஸ் மாணவர்கள் உள்பட 544 மாணவர்கள் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டால் பயனடைந்துள்ளனர். இதில், 337 எம்பிபிஎஸ் மாணவர்கள், 207 பிடிஎஸ் மாணவர்கள் உட்பட 544 மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். அவர்களுக்கான கட்டணத்தை அரசே ஏற்கும்.

இந்நிலையில் 544 மாணவர்களுக்கும் விரைவில் கை கணினி ஒன்று வழங்கி, அவர்களுக்கான பாடப்புத்தகங்களைப் பதிவிறக்கம் செய்து தரப்பட உள்ளது. மேலும், பெரம்பலூர், மயிலாடுதுறை,தென்காசி, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருப்பத்தூர் ஆகிய 6 மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரி அமைக்க முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லிக்குச் சென்று மத்திய அரசின் அமைச்சரைக் கேட்க உள்ளோம்.


உக்ரேனில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த 2 ஆயிரம் மருத்துவம் படிக்கும் மாணவர்கள், 3 பொதுமக்கள் உட்பட 5 ஆயிரம் பேரை பயணக் கட்டணத்தை ஏற்று வந்தே பாரத் என்னும் இந்திய அரசின் இலவச விமானம் மூலம் உக்ரேனில் இருந்து மாணவர்களையும், பொதுமக்களையும் மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்பின்னர் ஆன்லைனில் படிக்க ஏற்பாடு செய்யப்படும்" என்று கூறினார்.

அதனைத் தொடர்ந்து ஏழை குடும்பத்தில் பிறந்து அரசுப் பள்ளியில் படித்து மருத்துவக்கல்லூரியில் இடம் பிடித்த மாணவ, மாணவிகள் கூறுகையில் இந்த வாய்ப்பை அளித்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி செலுத்துவதாகவும், இதன் மூலம் மருத்துவம் படித்துப் படித்து மக்களுக்குச் சேவை செய்ய உள்ளதாகவும், மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் தெரிவித்தனர்.


இதையும் படிங்க: நான் தனி மனிதன் அல்ல; ஒரு கூட்டம்; முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

Last Updated : Mar 1, 2022, 1:38 PM IST

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details