தமிழ்நாடு

tamil nadu

குளு குளு ஊட்டியாக மாறிய திருவள்ளூர்.. காரணம் என்ன?

By

Published : Dec 27, 2022, 12:23 PM IST

திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை அதிக அளவில் பனிமூட்டம் காணப்பட்டது.

திருவள்ளூரில் பனிமூட்டம்
திருவள்ளூரில் பனிமூட்டம்

திருவள்ளூரில் பனிமூட்டம்

திருவள்ளூர்: மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வந்த நிலையில், இன்று காலை கடும் பனிப்பொழிவுவானது நிலவியது. இதில் திருவள்ளூர் ஈக்காடு, புள்ளம்பாக்கம், திருப்பாச்சூர், கனகம்மா சத்திரம், வேப்பம்பட்டு, அரண்வாயில் குப்பம், மணவாளநகர், ஊத்துக்கோட்டை, திருத்தணி, கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரி என பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது

மேலும் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், காலை முதலே கடும் பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வாகனங்களில் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டப்படி சென்றனர். மேலும் பல்வேறு பகுதிகளில் இருப்புப் பாதையில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டதால், ரயில்கள் மெதுவாக செல்கின்றனர். இதனால் திருவள்ளூர் மார்க்கமாக வரும் அனைத்து விரைவு ரயில்களும் காலதாமதமாக வருவதாக, ரயில்வே துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:தொடர் விடுமுறை: தஞ்சை பெரிய கோயிலில் குவிந்த பக்தர்கள்

ABOUT THE AUTHOR

...view details