தமிழ்நாடு

tamil nadu

Chandrababu Naidu arrest: தமிழக - ஆந்திர எல்லையில் நிலவும் பதற்றம்..! பேருந்து போக்குவரத்து நிறுத்தம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 9, 2023, 5:10 PM IST

ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை கண்டித்து அவரது கட்சி தொண்டர்கள் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் தமிழகத்தில் இருந்து ஆந்திர மாநிலம் செல்லும் பேருந்துகள் மாநில எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

bus service suspended to andhra
நூற்றுக்கணக்கான பேருந்துகள் ரத்து

திருவள்ளூர்: ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசி கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, முதலமைச்சராக இருந்த போது திறன் மேம்பாட்டு கழகத்தில் சுமார் 371 கோடி ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டதாக, நான்கு ஆண்டுகளுக்கு முன் தொடரப்பட்ட வழக்கில் இன்று (செப்.09) காலை, ஆந்திர மாநிலத்தில் உள்ள நந்தியாலா பகுதியில் வைத்து அவரை சிஐடி போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு கைது செய்யப்படும் தகவலை அறிந்த தெலுங்கு தேசம் கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள் கைது நடவடிக்கையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனையடுத்து வன்முறைகளை தவிர்க்க போலீசார் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் சந்திரபாபு நாயுடு கைதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கின்றன்ர். சந்திரபாபு நாயுடுவின் வழக்கறிஞர்கள் அவர் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அவரது கைது தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து சந்திரபாபு நாயுடு விசாரணைக்காக ஆந்திர மாநில சிஐடி போலீசாரின் கட்டுப்பாட்டில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஊழல் வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கையில் சந்திரபாபு நாயுடுவின் பெயர் குறிப்பிடப்படாத நிலையில், அவரை சட்டவிரோதமாக போலீசார் கைது செய்தாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சந்திரபாபு கைது செய்யப்பட்டதன் எதிரொலியாக திருத்தணி அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து ஆந்திர மாநிலத்திற்கு இயக்கப்படும் 35 தமிழக அரசு பேருந்துகள், ஆந்திர மாநிலத்தில் இருந்து திருத்தணி மற்றும் காஞ்சிபுரத்திற்கு இயக்கப்படும் 35 ஆந்திர மாநில அரசு பேருந்துகள் என மொத்தம் 70 பேருந்துகளின் சேவைகளை இன்று காலை முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் திருப்பதி மற்றும் ஆந்திர மாநிலத்திம் பிற பகுதிகளுக்கு செல்லலும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் கடும் அவதி அடைந்துள்ளனர். ஆந்திர மாநிலத்தில் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஊழல் புகாரில் கைது செய்யப்பட்டதால் அவரது ஆதரவாளர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் ஆந்திர மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தில் ஏற்படும் அசம்பாவிதங்களை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இரு மாநில அரசு பேருந்துகளின் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து இயக்கப்படும் நூற்றுக்கணகான பேருந்துகளும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் திருத்தணி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது.

இதையும் படிங்க: Chandrababu Naidu arrest : ஊழல் வழக்கில் சந்திரபாபு நாயுடு கைது! ஆந்திர சிஐடி போலீசார் நடவடிக்கை!

ABOUT THE AUTHOR

...view details