தமிழ்நாடு

tamil nadu

திமுக பிரமுகர் வெட்டிக்கொலை: பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியீடு!

By

Published : Feb 5, 2021, 4:12 PM IST

திருவள்ளூர்: பூந்தமல்லி மேற்கு ஒன்றிய திமுக துணைச் செயலாளரை வெட்டிப் படுகொலை செய்யப்படும் பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி
பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி

திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு அடுத்த மேல்மணம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் கருணாகரன். இவர், பூந்தமல்லி மேற்கு ஒன்றிய திமுக துணைச் செயலாளராக இருந்துவந்த நிலையில் பிப்.2ஆம் தேதி வெள்ளவேடு பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

இது குறித்து வெள்ளவேடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நீதிமன்றத்தில் விஷ்வா, அஸ்வின்குமார், தமிழ்செல்வன், சரவணன், இளமுருகன் ஆகிய 5 பேர் சரணடைந்தனர்.

பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி

இதையடுத்து, அவர்கள் மதுராந்தகம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், கருணாகரனை வெட்டிக்கொலை செய்யப்பட்ட பதைப்பதைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. அதில், இருசக்கர வாகனங்களில் வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் கருணாகரனை தலையில் சரமாரியாக வெட்டும் காட்சி பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க: சீர்காழி கொலை வழக்கு: குற்றவாளிகளைத் துண்டுத்துண்டாக வெட்டக்கோரி முதலமைச்சரின் பார்வைக்காக காணொலி...!

ABOUT THE AUTHOR

...view details