தமிழ்நாடு

tamil nadu

ஆற்றில் குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

By

Published : Aug 7, 2021, 8:35 PM IST

சோழவரம் அருகே காரனோடை கொசஸ்தலை ஆற்றில் குளிக்க சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு
3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

திருவள்ளூர்:காரனோடை பகுதியை சேர்ந்த சிறுவர்கள் ரஹமத் (15), அர்ஜுன் (13). திருவள்ளூர் ஈக்காடு பகுதியைச் சேர்ந்த சிறுவன் சத்யா(14). இவர்கள் மூவரும் நேற்று மாலை 4 மணியளவில் மீன்பிடிப்பதாக கூறி ஆற்றுக்கு சென்றுள்ளனர்.

மூன்று சிறுவர்களும் இரவு வரை வீடு திரும்பாததால், இதுகுறித்து சோழவரம் காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் அளித்தனர். ஆற்றங்கரையில் சிறுவர்களின் உடைகள் இருப்பதை கண்ட காவல் துறையினர், செங்குன்றம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து தீயணைப்புத்துறையினரின் பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு, ஆற்றில் இருந்து மூன்று சிறுவர்களும் சடலங்களாக மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட உடல்கள், உடற்கூராய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து சோழவரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு - போக்சோவில் ஒருவர் கைது

ABOUT THE AUTHOR

...view details