தமிழ்நாடு

tamil nadu

கொசஸ்தலை ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு

By

Published : Oct 16, 2022, 11:43 AM IST

திருத்தணி அருகே கொசஸ்தலை ஆற்றில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர்.

ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி
ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த மணவூர் பகுதி சேர்ந்த கருணாகரன் மகன் நிரஞ்சன் (17) மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன் மகன் கோகுல் (15) இருவரும் கொசஸ்தலை ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர்.

இருவருக்கும் நீச்சல் தெரியாத நிலையில் ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர். இதனால் நீரில் மூழ்கியுள்ளனர். ஆற்றங்கரையில் கிடந்த சிறுவர்களின் உடைகளை கண்டு சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின் அடிப்படையில் தீயணைப்பு வீரர்கள் மணவூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் உதவியுடன் சிறுவர்கலின் உடல்களை மீட்டனர். அதன்பின் திருவலாங்காடு போலீசார் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விசாரணை நடந்துவருகிறது.

இதையும் படிங்க: திண்டுக்கல்லில் 3 குழந்தை நீரில் மூழ்கி உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details