தமிழ்நாடு

tamil nadu

நெல் கொள்முதல் நிலையத்தில் கணக்கில் வராத 1.07 லட்சம் பறிமுதல்

By

Published : Nov 2, 2020, 2:10 PM IST

திருவள்ளூர்: நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 1.07 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

Paddy Procurement Center
Paddy Procurement Center

திருவள்ளூர் மண்டலத்தில் உள்ள நேரடி கொள்முதல் நிலையத்தில் முறைகேடுகள் நடப்பதாகச் சென்னை லஞ்ச ஒழிப்புத் துறையினருக்குத் தகவல் வந்தது. அதன் பேரில் மாவட்ட ஆய்வுக் குழுவுடன் புல்லரம்பாக்கம் பகுதியில் உள்ள தற்காலிக தேரடி கொள்முதல் நிலையத்தில் அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நெல் கொள்முதல் எழுத்தரான தணிகைவேல் என்பவரிடம் கணக்கில் வராத ரூ 25,000 ஆயிரம் பணமும், 2 பேர் லஞ்சம் கொடுக்க வைத்திருந்தது என மொத்தமாக 1 லட்சத்து 07 ஆயிரத்து 300 பணத்தை லஞ்ச ஒழிப்புத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

கணக்கில் வராத பணம் வைத்திருந்தவர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details