தமிழ்நாடு

tamil nadu

’ஆதரவற்ற குழந்தைகளும் தீபாவளி கொண்டாட வேண்டும்’ நெகிழ வைத்த அறக்கட்டளை..!

By

Published : Oct 21, 2022, 9:15 PM IST

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு அவர்கள் விருப்பப்படி புத்தாடைகள் வாங்கி கொடுத்து அழகு பார்த்த அறக்கட்டளை நிர்வாகத்தின் செயல் நெகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது

ஆதரவற்ற குழந்தைகளும் தீபாவளி கொண்டாட வேண்டும்
ஆதரவற்ற குழந்தைகளும் தீபாவளி கொண்டாட வேண்டும்

நெல்லை: தீபாவளி பண்டிகை வரும் 24ஆம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்பட இருக்கிறது. தீபாவளி என்றாலே அனைவரும் புத்தாடைகள் வாங்கி, பட்டாசுகள் வெடித்து, வீட்டில் பலகாரங்கள் செய்து, குடும்பத்துடன் உற்சாகமாகக் கொண்டாடுவார்கள். ஆனால் குடும்பத்தை இழந்த பல சிறுவர்களுக்கு இது போன்ற பண்டிகைகள் என்பது வெறும் கனவாகவே இருந்து வருகிறது.

இதுபோன்ற சூழ்நிலையில் நெல்லையைச் சேர்ந்த தனியார் அறக்கட்டளையினர் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களை இழந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு இலவசமாகப் புத்தாடைகள் வாங்கி கொடுத்து அழகு பார்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி நெல்லை அன்னை தெரசா அறக்கட்டளையினர், சந்திப்பு பகுதியில் உள்ள காப்பகத்தில் வசித்து வரும் பெற்றோர்களை இழந்த ஆதரவற்ற மற்றும் ஏழை குழந்தைகளுடன் தீபாவளியை உற்சாகமுடன் கொண்டாட முடிவு செய்துள்ளனர்.

இதையொட்டி இன்று குழந்தைகளை ஜவுளிக்கடைக்கு அழைத்துச் சென்று அவர்களுக்குப் பிடித்த புத்தாடைகளைத் தேர்வு செய்து எடுத்துக் கொள்ளும்படி கூறினர். இதையடுத்து குழந்தைகள் மகிழ்ச்சியோடு தங்களுக்குப் பிடித்த ஆடைகளை வாங்கிக் கொண்டனர். ஆதரவற்ற குழந்தைகளை நேரடியாகக் கடைக்கு அழைத்துச் சென்று அவர்கள் விருப்பப்படியே புத்தாடைகள் வாங்கி கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அறக்கட்டளை நிர்வாகி மகேஷ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற ஆதரவற்ற குழந்தைகளுக்கு இலவசமாக ஆடைகள் வாங்கி கொடுக்கிறோம். இதனால் அவர்களும் மகிழ்ச்சி அடைகிறார்கள் எங்களுக்கும் ஒருவித திருப்தி ஏற்படுகிறது என்று தெரிவித்தார்.

ஆதரவற்ற குழந்தைகளும் தீபாவளி கொண்டாட வேண்டும்

இதையும் படிங்க:தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது பணியில் இருந்த காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

ABOUT THE AUTHOR

...view details