தமிழ்நாடு

tamil nadu

விவசாயி கொலை வழக்கில் ஊர் நாட்டாமை உள்பட 11 பேர் கைது!

By

Published : Jul 30, 2020, 12:49 AM IST

Updated : Jul 31, 2020, 12:52 PM IST

திருநெல்வேலி: அம்பை அருகே விவசாயி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஊர் நாட்டாமை உள்பட 11 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

விவசாயி கொலை வழக்கில் ஊர் நாட்டாமை உள்பட 11 பேர் கைது!
விவசாயி கொலை வழக்கில் ஊர் நாட்டாமை உள்பட 11 பேர் கைது!

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள கெளவுதமபுரியைச் சேர்ந்த விவசாயி மதியழகன் (48), அதே பகுதியில் நேற்று முன்தினம் (ஜூலை 27) அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து அம்பசமுத்திரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தச் சூழலில் ஊர் நாட்டாமை, மதியழகனை திட்டமிட்டு படுகொலை செய்துள்ளார் எனக் கூறி அவரின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர். மேலும் சம்பந்தப்பட்டவர்களைக் குண்டர் சட்டத்தில் கைதுசெய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என்றும் அவர்கள் கூறினர். பின்னர் சமரசப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு பாளையங்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்ட மதியழகன் உடலை நேற்றிரவு (ஜூலை 28) உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் இன்று கௌதமபுரி ஊர் நாட்டாமை ராஜகோபால் உள்பட 11 பேரை அம்பாசமுத்திரம் காவல் துறையினர் கைது செய்தனர். உள்ளூர் நீதிமன்றத்தில் தொடங்கி உச்ச நீதிமன்றம் வரை நாள்தோறும் பல்வேறு வழக்குகள் பரபரப்பாக விசாரிக்கப்பட்டுவரும் இந்தக் காலத்திலும், தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் ஊர் நாட்டாமை பஞ்சாயத்து நீடித்துவருகிறது. அந்த வகையில், இந்தக் கொலை வழக்கிலும் ஊர் நாட்டாமை பஞ்சாயத்து பிரச்னையால்தான் விவசாயி மதியழகன் திட்டமிட்டு தீர்த்துக் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மதியழகன் சகோதரர் ரவிக்கும் ஊர் நிர்வாகிகளுக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துவந்துள்ளது. ரவியின் மூத்த மகள் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் கௌதமபுரி ஊர் வழக்கப்படி காதலித்து திருமணம் செய்து கொண்டால், சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் ஊர் நாட்டாமையிடம் அபராதம் செலுத்த வேண்டும் என்ற நடைமுறை இருந்துவந்துள்ளது. எனவே ஊர் நாட்டாமையாக இருந்துவரும் ராஜகோபால், ரவியிடம் 1,500 ரூபாய் அபராதம் கேட்டுள்ளார். முதலில் கொடுக்க மறுத்த ரவி, பின்னர் உறவினர்கள் வலியுறுத்தியதன் பேரில் அபராதம் செலுத்தியுள்ளார்.

விவசாயி கொலை வழக்கில் ஊர் நாட்டாமை உள்பட 11 பேர் கைது!

இதற்கிடையில் சில ஆண்டுகள் கழித்து மீண்டும் ஊர் நாட்டாமை ஒரு லட்சம் ரூபாய் அபராதம் தர வேண்டும், என்றும், இல்லையென்றால் ஊரை விட்டு ஒதுக்கிவைப்போம் என்றும் ரவியை மிரட்டியுள்ளார். ஆனால், மீண்டும் அபராதம் செலுத்த ரவி மறுத்துள்ளார். இதுதொடர்பாக ஊர் நிர்வாகிகளுக்கும் ரவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்தச் சூழலில்தான் நேற்றைய முன்தினம் (ஜூலை 27) மதியழகன், ரவி இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றபோது 12 பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்து அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் மதியழகன் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ரவிக்கு தலையில் மட்டும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது 11 பேரைக் கைதுசெய்துள்ள நிலையில் தலைமறைவாக இருக்கும் பாக்யராஜ் என்பவரைக் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.


இதையும் படிங்க...
சென்னை பெண்களிடம் செயின் பறிப்பு - கொள்ளை கும்பல் கை
து

Last Updated : Jul 31, 2020, 12:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details