தமிழ்நாடு

tamil nadu

ரசிக்கும்படி 90’ஸ் கிட்ஸ்கள் கொண்டாடிய 'தல' தீபாவளி

By

Published : Nov 4, 2021, 4:29 PM IST

நெல்லையில் தீபாவளி கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. புதுமணத் தம்பதிகள் 'தல' தீபாவளியை ஒட்டி புத்தாடைகள் உடுத்தியும், தங்க நகைகள் அணிந்தும் கொண்டாடி வருகின்றனர்.

பரிசுகளுடன் தல தீபாவளி கொண்டாடும் புதுமணத் தம்பதிகள்
பரிசுகளுடன் தல தீபாவளி கொண்டாடும் புதுமணத் தம்பதிகள்

திருநெல்வேலி: நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகை இன்று (நவ.4) கொண்டாடப்பட்டு வருகிறது. பட்டாசுகள் வெடித்தும், இனிப்பு வழங்கியும் மக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிபடுத்துகின்றனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடை உடுத்தியும், கோயிலுக்குச் சென்று வழிபட்டும் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர்.

குறிப்பாக 'தல' தீபாவளி கொண்டாடும் புதுமணத்தம்பதிகள் காலை முதல் மிகுந்த உற்சாகத்துடன் புத்தாடை உடுத்தி, தங்க நகைகள் அணிந்து, தங்களது தீபாவளியைக் கொண்டாடுகின்றனர். அதாவது புதிதாக திருமணமான தம்பதிகள், திருமணத்திற்குப் பிறகு கொண்டாடும் முதல் தீபாவளியை 'தல' தீபாவளியாக கொண்டாடுவது வழக்கம்.

இதையொட்டி, பெண் வீட்டார் தரப்பில் தனது மகள் மற்றும் மருமகனுக்குத் 'தல' தீபாவளிப் பரிசாக புத்தாடைகள், புது நகைகள், இனிப்புகளைப் பரிசாக கொடுத்து மகிழ்விப்பர்.

தல தீபாவளி கொண்டாடும் புதுமணத் தம்பதிகள்

அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம், பாலாஜி அவென்யூவில் புதிதாகத் திருமணமான தம்பதி ஆனந்த் - திவ்யலட்சுமி தங்களது 'தல' தீபாவளியைக் கொண்டாடி வருகின்றனர்.

திவ்யலட்சுமி வீட்டில் மருமகன் ஆனந்திற்கு தங்க மோதிரம் வழங்கினர். ஆனந்த் தன் மனைவி திவ்யலட்சுமிக்கு தங்க செயினை தீபாவளி பரிசாக கொடுத்தார். பின் இருவரும் பெற்றோரிடம் ஆசீர்வாதம் பெற்றனர்.

தொடர்ந்து பட்டாசுகள் வெடித்து, 'தல' தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர்.

இதையும் படிங்க: தீபாவளிக்கு பட்டாசு வெடிக்காத கிராமம் மக்கள் - காரணம் தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details