தமிழ்நாடு

tamil nadu

அடவிநயினார் அணையின் மதகு தற்காலிகமாக சரிசெய்யப்பட்டது - சாலை எப்போது சீரமைக்கப்படும்?

By

Published : Sep 9, 2019, 4:36 PM IST

திருநெல்வேலி: செங்கோட்டை அருகே உள்ள மேக்கரை அடவிநயினார் அணையின் மதகு தற்காலிகமாக சரி செய்யப்பட்டதுள்ளதையடுத்து, சேதமடைந்த சாலையையும் விரைவில் சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடவிநயினார் அணை

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மேக்கரை அடவிநயினார் அணையின் மதகு திறக்கப்பட்டபோது எதிர்பாராதவிதமாக கதவு உடைந்ததால் அதிகளவில் தண்ணீர் வெளியேறி மண்சரிவு ஏற்பட்டு வயல்வெளிகளில் புகுந்தது. இதனால் விவசாய நிலம் நாசமானது. மேலும், வடகரை செல்லும் சாலையும் முற்றிலுமாக சேதமடைந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

அடவிநயினார் அணையின் மதகு தற்காலிகமாக சரிசெய்யப்பட்டது

இந்நிலையில் பொதுப்பணித் துறை அலுவலர்களால் அணையின் மதகு தற்காலிமாக சரி செய்யப்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் பேசுகையில், ’அடவிநயினார் அணையின் மதகு உடைந்ததை தற்காலிகமாக சரி செய்தது மகிழ்ச்சியளிக்கிறது. இதேபோல் மண்சரிவு ஏற்பட்டு சேதமடைந்த சாலையையும் விரைவில் சீரமைத்து கொடுத்தால் போக்குவரத்திற்கும், விவசாயத்திற்கும் பயன்பெறும்’ என்றனர்.

Intro:உடைந்த மேக்கரை அணை மதகு தற்காலிகமாக சரிசெய்யப்பட்டது விரைவில் சேதமடைந்த சாலையையும் சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை


Body:நெல்லை மேற்கு மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மேக்கரை அடவிநயினார் அணை நேற்று மதகு திறக்கப்பட்ட போது எதிர்பாராதவிதமாக உடைந்து அதிக அளவில் தண்ணீர் வெளியேறி வெள்ளம் ஏற்பட்டு மேக்கரை வடகரை சாலை அழைத்துச் சென்றது மேலும் அதிக அளவு நீர் வயல்வெளிகள் புகுந்ததால் பல ஏக்கர் நிலம் நாசம் அடைந்துள்ளது மேற்கிலிருந்து வடகரை செல்லும் சாலை முற்றிலுமாக சேதம் அடைந்து மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டது இந்நிலையில் பொதுமக்கள் உடைந்த மதகை விரைவில் சீரமைத்து தர வேண்டும் என நேற்று கோரிக்கை விடுத்து விரைவில் சாலை அமைத்து தர வேண்டி கோரிக்கை வைத்தனர் இந்நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் நாம கோரிக்கையை முன்வைத்த போது விரைவில் சரி செய்து தருவதாக நேற்று தெரிவித்தார் நேற்று இரவு வரை சரி செய்ய பெரிதும் முயற்சி மேற்கொண்டு வந்த நிலையில் இன்று அதிகாலை தற்காலிகமாக அணை மதகு சரி செய்யப்பட்டது மேலும் பொதுமக்களிடம் இதுகுறித்து கேட்கும்போது அணையின் மதகு தற்காலிகமாக சரி செய்யப்பட்டது சிறிது ஆறுதலாக இருப்பதாகவும் அணை மதகு உடைந்தது குறித்து உரிய நேரத்தில் செய்தி வெளியிடும் பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் பேசி தற்காலிக நடவடிக்கை எடுத்தமைக்கு சன் செய்தி தொலைக்காட்சிக்கு நன்றியும் தெரிவித்துக் கொண்டனர் மேலும் மேக்கரை வடகரை சாலையை விரைவில் சீரமைத்து தர கோரிக்கை முன்வைத்துள்ளனர்


Conclusion:பேட்டி

முஹம்மது
வடகரை

P2C

ABOUT THE AUTHOR

...view details