தமிழ்நாடு

tamil nadu

குவாட்டருக்கு ரூ.30 கேட்டதால் மன உளைச்சல்; குடிமகனுக்கு இழப்பீடு வழங்க கோர்ட் ஆணை!

By

Published : Nov 25, 2022, 4:25 PM IST

நெல்லையில் குவாட்டருக்கு 30 ரூபாய் அதிகம் வைத்து விற்றதால், மன உளாச்சலால் இரவு முழுவதும் தூங்காமல் தவித்த குடிமகனுக்கு 11,000 ரூபாய் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குடிமகனுக்கு இழப்பீடு வழங்க உத்தரவு
குடிமகனுக்கு இழப்பீடு வழங்க உத்தரவு

திருநெல்வேலி: நெல்லை சந்திப்பு அருகே உள்ள மணி மூர்த்தீஸ்வரத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர், மேல அம்பாசமுத்திரத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் கடந்த 23.06.2020 அன்று குவாட்டர் வாங்கியுள்ளார். அப்போது குவாட்டரின் அதிகபட்ச சில்லறை விலை 160 ரூபாய் என அதில் அச்சிடப்பட்டிருந்தது. ஆனால் அதனை 190 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர்.

தன்னிடம் கூடுதலாக 30 ரூபாய் வசூல் செய்த டாஸ்மாக் ஊழியர்கள் குறித்து வேல்முருகன், திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அதில், கூடுதல் கட்டணம் வசூலித்ததால் மன உளைச்சலும், மூளைச் சூடு ஏற்பட்டு இரவு முழுவதும் தூங்காமல் நிம்மதி இழந்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நுகர்வோர் நீதிமன்றம், வேல்முருகனுக்கு ரூபாய் 11,000 இழப்பீடு வழங்க வேண்டுமென சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை விற்பனை மேற்பார்வையாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க:"மனைவி வேண்டாம்... நிம்மதி வேண்டும்" - செல்போன் டவரில் ஏறி குடிமகன் ரகளை...

ABOUT THE AUTHOR

...view details