தமிழ்நாடு

tamil nadu

ஒரு பெண்ணை இருவர் காதலித்த தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை

By

Published : Aug 30, 2021, 2:06 AM IST

ஒரே பெண்ணை இருவர் காதலித்ததில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே பெண்ணை இருவர் காதலித்த தகராறில் இளைஞர் வெட்டி கொலை
ஒரே பெண்ணை இருவர் காதலித்த தகராறில் இளைஞர் வெட்டி கொலை

திருநெல்வேலி:கூத்தன்குழியைச் சேர்ந்த மீனவர், சிலுவை கித்தேரியானின் மகன் ஆன்றோ அபினேஷ் (20).

இவரும், அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்தப் பெண்ணை அதே பகுதியைச் சேர்ந்த சந்துரு (20) என்பவரும் காதலித்து வந்துள்ளார்.

ஆன்றோ அபினேஷ்க்கும், சந்துருவுக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று (ஆக.28) இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில் ஆன்றோ அபினேஷை சந்துரு மற்றும் அவரது நண்பர்கள் அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் ஆன்றோ அபினேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

குற்றவாளிகள் கைது

தகவலறிந்து வந்த கூடன்குளம் காவல்துறையினர் ஆன்றோ அபினேஷின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் சந்துரு, பிரதீஷ் (19), டென்னிஸ் (21), இருதயராஜ் (39) ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: பெற்ற குழந்தையை கொடூரமாக தாக்கி வீடியோ எடுத்த தாய்: கொலை முயற்சி வழக்குப் பதிந்து போலீஸார் விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details