தமிழ்நாடு

tamil nadu

ரூ.63 லட்சம் ஹரி நாடார் மோசடி செய்ததாக கேரள டிவி சேனல் இயக்குநர் புகார்

By

Published : Mar 30, 2021, 10:12 PM IST

திருநெல்வேலி: 63 லட்சம் ரூபாய் ஹரி நாடார் மோசடி செய்ததாக மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கேரள தொலைக்காட்சி சேனல் இயக்குநர் புகார் மனு அளித்துள்ளார்.

ஹரி நாடார் ரூ.63 லட்சம் மோசடி செய்ததாக கேரள டிவி சேனல் இயக்குநர் புகார்
ஹரி நாடார் ரூ.63 லட்சம் மோசடி செய்ததாக கேரள டிவி சேனல் இயக்குநர் புகார்

பனங்காட்டுப் படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார். கழுத்தில் கிலோ கணக்கில் நகைகள் அணிந்தபடி வலம்வருவதன் மூலம் இவர் பிரபலமானார். தற்போது நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

கடந்த சில வாரங்களாக இவர் ஆலங்குளத்தில் முகாமிட்டுத் தீவிர பரப்புரை செய்துவருகிறார். அவரை ஆதரித்து பனங்காட்டுப் படை கட்சித் தலைவர் ராக்கெட் ராஜாவும் பரப்புரை செய்துவருகிறார்.

இந்தச் சூழ்நிலையில் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஹரி நாடார் மீது கேரள தொலைக்காட்சி நிறுவனம் புகார் மனு அளித்துள்ளது.

அதில் 63 லட்சம் ரூபாயை ஹரி நாடார் மோசடி செய்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் நெல்லை சேதுராம பாண்டியனின் பேரன் மூர்த்தி தேவர் மீதும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது மோசடி புகார் குறித்து நெல்லை மாநகர குற்றப்பிரிவு காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: ஆலங்குளத்தில் நிற்கும் ஹரி நாடார் : யார் இந்த நடமாடும் நகைக்கடை?

ABOUT THE AUTHOR

...view details