தமிழ்நாடு

tamil nadu

நியாய விலை கடையில் அத்தியாவசிய பொருள்கள் இருப்பு வைக்க வேண்டும் - முத்தரசன்

By

Published : Nov 21, 2020, 3:27 PM IST

திருநெல்வேலி: பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அனைத்து நியாயவிலை கடைகளிலும் அத்தியாவசியப் பொருள்கள் போதியளவு இருப்பு வைத்திருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

mutharasan
mutharasan

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் இன்று (நவ.21) நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. எனவே அரசு உரிய முன்னெச்சரிக்கையுடன் கவனம் செலுத்த வேண்டும். கடந்த ஆண்டு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டது.

தற்போது மழை வெள்ளப் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் அனைத்து நியாயவிலை கடைகளிலும் அத்தியாவசியப் பொருள்கள் போதிய அளவு இருப்பு வைத்து கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து கடைகளிலும் ஜெனரேட்டர் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். மழைக் காலங்களில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படும் சமயத்தில் அதை பயன்படுத்தி அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்படுவது தாமதமாகும்.

அனைத்து கடைகளிலும் ஜெனரேட்டர் வசதி தேவை

அதேபோன்று செல்வகுமார் என்ற ஆசிரியர் வானிலை குறித்து ஆராய்ந்து, இனி வரும் நாள்களில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளார். அரசு இதில் அலட்சியம் காட்டாமல் அதற்கான தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என வலியுறுத்தினார்.

இதையும் படிங்க:யுஜிசி விதிமுறைகளுக்கு உட்பட்டே அரியர் தேர்வுகள் ரத்து - உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்!

ABOUT THE AUTHOR

...view details