தமிழ்நாடு

tamil nadu

பங்குனி உத்திரம்.. நெல்லையில் உள்ளூர் விடுமுறை..

By

Published : Mar 21, 2023, 5:47 PM IST

பங்குனி உத்திர திருநாள் 05.04. 2023 புதன்கிழமை அன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும் நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் விடுமுறை
நெல்லையில் வருகிற ஏப்ரல் 5ம் தேதி உள்ளூர் விடுமுறை

நெல்லை:நெல்லையில் பங்குனி உத்திர திருநாள் 05.04. 2023 புதன்கிழமை அன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

மேற்குறிப்பிட்ட நாளில் அரசு பொதுத்தேர்வுகள் ஏதும் இருப்பின் பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறும். பள்ளிகள் மற்றும் பொதுத்தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறையானது பொருந்தாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பங்குனி உத்திர திருவிழா என்பது நெல்லை தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மக்கள் கொண்டாடும் முக்கிய திருவிழாவாகப் பார்க்கப்படுகிறது. பங்குனி மாதம் உத்திர நட்சத்திரம் அன்று பொதுமக்கள் தங்கள் குல தெய்வங்களுக்கு விழா எடுத்து கொண்டாடுவார்கள் குறிப்பாக பல கிலோமீட்டர் தூரம் உள்ள குலதெய்வ கோயில்களுக்கு பொதுமக்கள் குடும்பத்துடன் சென்று நாள் முழுவதும் தங்கியிருந்து தரிசனம் செய்வார்கள். எனவே தென் மாவட்ட மக்களின் வசதிக்காக பங்குனி திருவிழாவிற்கு ஆண்டு தோறும் உள்ளூர் விடுமுறை விடப்படுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் பங்குனி உத்திரத் திருநாளான 05.03.23 அன்று நடத்தப்படும் அரசு பொதுத்தேர்வுகள் அனைத்தும் எவ்வித மாறுதலுமின்றி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சொந்த ஊரை விட்டு வெளியூர்களில் வசிக்கும் மக்களும், பங்குனி உத்திரத்தன்று தங்கள் குல தெய்வத்தை தேடி வந்து வணங்கும் நாளாக பங்குனி உத்திரம் உள்ளது.

இதையும் படிங்க:விவசாயிகளுக்கு வெளிநாடுகளில் பயிற்சி ; பள்ளி மாணவர்களுக்கு பண்ணைச் சுற்றுலா!

ABOUT THE AUTHOR

...view details