தமிழ்நாடு

tamil nadu

75ஆவது விடுதலை நாள்: 75 சாதனை பெண்களின் காபி ஓவியம் - அசத்தும் மாணவி

By

Published : Aug 10, 2021, 10:16 AM IST

விடுதலை நாளை முன்னிட்டு சாதனை முயற்சியாக நெல்லையைச் சேர்ந்த மாணவி காபி தூள் கரைசலில் 75 சாதனை பெண்களின் உருவப்படங்களை வரைந்து அசத்தியுள்ளார்.

Madana Lakshmikanth
மதனா லட்சுமிகாந்த்

திருநெல்வேலி: இந்தியா 75ஆவது விடுதலை நாள் விழாவை கொண்டாடவுள்ளது. இதனை முன்னிட்டு பாளையங்கோட்டையில் செயல்படும் சிவராம் கலைக்கூடத்தில் ஓவியம் பயின்றுவரும் மாணவி மதனா லட்சுமிகாந்த் ஒரு புதிய சாதனை படைத்துள்ளார்.

முன்னேற்றப் பாதையில் பயணிக்கும் இந்தியாவின் அடுப்பூதும் பெண்கள் தொடங்கி விண்வெளியில் சாதனை படைத்த கல்பனா சாவ்லா வரை 75 பெண் சாதனையாளர்களை வீட்டில் பயன்படுத்தும் காபி தூளை கொண்டு ஓவியமாகத் தீட்டியுள்ளார் மதனா. இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கொண்டாடப்படும் விடுதலை நாள்

இந்த ஓவியங்களுக்காக எட்டு மாத காலம் தொடர்ந்து ஓவிய பணிகளை மேற்கொண்டு 75 ஓவியங்களை தத்ரூபமாக வரைந்தார். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி தொடங்கி ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை மீராபாய் வரை அனைவரின் ஓவியங்களையும் வரைந்து முடித்திருக்கிறார்.

மாணவி மதனா லட்சுமிகாந்த்

பாளையங்கோட்டை தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்துவரும் மாணவி மதனா, பென்சில் ஷேடிங் ஃபேப்ரிக் கலர்ஸ், அக்ரலிக் கலர், கலர் மற்றும் ஆயில் கலர் இவற்றைக் கொண்டு மிகத் திறமையாக வரையும் ஓவியர் ரவிவர்மாவின் ஓவியத்தையும் அப்படியே வரைவதில் திறமை படைத்தவர்.

75 சாதனை பெண்களின் காபி ஓவியம்- அசத்தும் மாணவி

இளம் ரவிவர்மா

மகாகவி பாரதியாரின் பிறந்தநாளை முன்னிட்டு மதனா வரைந்த பாரதியாரின் முழு உருவ ஓவியம் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது என்பது முந்தைய சிறப்பு. இந்த முறை விடுதலை நாள் விழாவை முன்னிட்டு வித்தியாசமான முயற்சியாக காபி தூள் பயன்படுத்தி இந்த 75 ஓவியங்களை வரைந்துள்ளார்.

இளம் ரவிவர்மா என்று அழைக்கப்படும் மதனா இதுவரை பங்கேற்ற மாவட்ட, மாநில அளவிலான ஓவிய போட்டிகளில் பல வெற்றிகளைப் பெற்றுள்ளார். இஸ்ரோ சார்பில் மாவட்டங்களுக்கு இடையேயான நடந்த ஓவிய போட்டிகளில் முதல் பரிசு பெற்றுள்ளார்.

இதையும் படிங்க:காபி தூள் திரவத்தில் காந்தி உருவம் - கின்னஸ் சாதனை படைக்க ஓவிய ஆசிரியர் முயற்சி

ABOUT THE AUTHOR

...view details